கண்ணா இன்னிக்கி டிரெய்லர் மட்டும்தான்... மெயின் பிக்ஷர் காலாவுக்கு பிறகுதான்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் இன்று அரசியலுக்கு வருவேன் என்பதை மட்டும்தான் கூறவுள்ளார் என்றும் கட்சி, கொடி குறித்த அறிவிப்புகள் எல்லாம் பின்னர் தான் என்றும் கருத்துகள் உலவுகின்றன.

ரஜினிகாந்த் கடந்த 26-ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவர் முதல் நாளன்று தனது அரசியல் நிலைப்பாடு குறித்து 31-ஆம் தேதி அறிவிக்க போவதாக ரஜினி கூறியிருந்தார்.

Rajinikanth going to announce his political entry today

கடந்த 5 நாட்களாக ரஜினியிடம் அரசியல் குறித்து கேட்கப்பட்டு அவர் பொறுத்திருங்கள் என்றார். இந்நிலையில் இன்று ராகவேந்திரா மண்டபத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

அந்த சாலையே போக்குவரத்து நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைவர் இன்று என்ன சொல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பு கோடான கோடி கண்களில் தெரிகிறது.

இன்று தனிக் கட்சி தொடங்குகிறார் என்ற தகவல் வெளியானது. அதேபோல் இன்று அரசியலுக்கு வருவேன் என்று மட்டும் அறிவித்துவிட்டு மற்றதை காலா படத்துக்கு பிறகு அறிவிப்பார் என்று மற்றொரு நம்பத்தகுந்த தகவலும் வருகின்றன.

எது எப்படியோ ரசிகர்களின் 20 ஆண்டுகால எதிர்பார்ப்பு, ஆசை என இன்று பூர்த்தியாகும் என்றே கூறப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rajinikanth is going to announce his political entry today. Fans and people are listening what Rajini will say?

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X