'காலா' முடிந்த உடன் இமயமலை பறக்கிறார் ரஜினி! - அப்போ ரசிகர்கள் சந்திப்பு?
காலா படப்பிடிப்பு முடிந்த பிறகு நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video

சென்னை : பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் காலா படப்பிடிப்பிற்குப் பின்னர் நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் ரஜினிகாந்த் தனது படப்பிடிப்பு முடிந்தவுடன் இமயமலைக்கு சென்று புத்துணர்ச்சி பெற்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படம் வெற்றியடைந்த நிலையில், அவருடைய இயக்கத்தில் மும்பையில் வசிக்கும் தமிழ் தாதா பற்றிய திரைப்படமான காலாவில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
மே மாதத்தில் இதற்கான படப்பிடிப்புகள் மும்பையில் தொடங்கின. இதனைத்தொடர்ந்து சென்னையில் மும்பை தாராவி போன்று செட் அமைக்கப்பட்டும் படப்பிடிப்பு நடந்தது. இந்நிலையில் தற்போது கடப்பாவில் படப்பிடிப்பின் இறுதிக் கட்டத்தில் உள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

தொடர் படப்பிடிப்புகள்
படிப்பிடிப்பு முடிந்த கையோடு அவர் 10 நாட்கள் இமயமலைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். கபாலி படப்பிடிப்பை தொடர்ந்து
ஷங்கரின் 2.0 திரைப்பட படப்பிடிப்பு, காலா படப்பிடிப்பில் ரஜினிகாந்த் பங்கேற்றார். இதனிடையே ஒரு மாத காலம் ரசிகர்களை சந்தித்தார். அடுத்தடுத்து படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் ஆன்மீகத்தில் அவரால் முழு ஈடுபாட்டுடன் செயல்பட முடியவில்லை.

இமயமலையில் தியானம்
இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்த கையோடு அவர் இமயமலை சென்று அங்குள்ள கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்த உள்ளார். இதே போன்று பாபா குகைக்கும் சென்று ரஜினிகாந்த் தியானம் மேற்கொள்ள உள்ளார்.

ரசிகர்களுடன் சந்திப்பு
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து இன்னும் ஒரு தெளிவான அறிவிப்பு வெளியாகாத நிலையில், இந்த இமயமலை சுற்றுப்பயணத்திற்குப் பிறகு அரசியல் குறித்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று தெரிகிறது. இதே போன்று விடுபட்டு போன மாவட்ட ரசிகர்களுடனான சந்திப்புக்கான தேதியும் அப்போது அறிவிக்கப்பட உள்ளது.

பிறந்தநாளில் முற்றுப்புள்ளி
2.0 திரைப்படத்தின் பாடல் இந்த மாத இறுதியில் துபாயில் நடைபறெ உள்ளது, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் ரஜினி. அநேகமாக அடுத்த மாதத்தில் அவர் இமயமலை பயணம் மேற்கொள்ளவார் என்றும் தன்னுடைய பிறந்தநாளை ஒட்டி அரசியல் வருகைக்கு முற்றுப்புள்ளி வைப்பார் ரஜினி என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications