தமிழக அரசியலில் அடுத்தது ரஜினிதான்! - தொல் திருமாவளவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களம் ரஜினியை மையப் புள்ளியாகக் கொண்டு இயங்கும் சூழல் உருவாகியுள்ளது.

சின்னச் சின்ன கட்சிகள், தமிழ் தேசியவாதம் பேசும் சிலர் ரஜினியை விமர்சித்துக் கொண்டிருக்கையில், தமிழருவி மணியன் போன்றோர் ரஜினி வர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

ரஜினியை ஆரம்பத்திலிருந்தே அரசியலுக்கு அழைத்துக் கொண்டிருந்த தலைவர்களில் முக்கியமானவர் தொல் திருமாவளவன். அப்போதெல்லாம் ரஜினி பிடிகொடுக்கவில்லை. இப்போது ரஜினியே அரசியல் பேச்சை ஆரம்பித்து வைத்திருப்பதால் திருமாவளவன் உற்சாகமாக உள்ளார்.

Rajinikanth is the next ruler of Tamil Nadu - Thirumavalavan

பத்திரிகைகள், தொலைக்காட்சி விவாதங்களில் திருமாவளவன் வெளிப்படையாக ரஜினியை வரவேற்றுள்ளார். சமீபத்திய பேட்டியொன்றில், கருணாநிதி, ஜெயலலிதா இடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தமிழக அரசியலில் அடுத்து ரஜினிகாந்த் ஆட்சிதான் என்று தந்தி டிவியில் பேசுகிறார் திருமாவளவன். இன்று இரவு அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

விரைவில் ரஜினியைச் சந்தித்து அவரது அரசியல் பிரவேசத்துக்கு வரவேற்பு தெரிவிப்பார் திருமாவளவன் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Thol Thirumavalavan says that Rajinikanth will rule Tamil Nadu in future.
Please Wait while comments are loading...