நான் பச்சைத்தமிழன்.. வேறு எந்த மாநிலத்திற்கும் போகமாட்டேன்.. திடீரென பொங்கிய ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தான் பிறந்தது கர்நாடகாவில் இருந்தாலும், 44 ஆண்டுகளாக தமிழகத்தில் வாழ்வதால் தான் பச்சைத் தமிழன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

8 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட வாரியாக அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். கடைசி நாளான இன்று ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த் தான் தமிழனா என்று சமூக வலைதளங்கள் மற்றும் டுவிட்டரில் வெளியாகும் தரமற்ற விமர்சனங்கள் வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.

Rajinikanth says that he is a Tamilian

இதுகுறித்து இன்று ரசிகர்களிடையே அவர் பேசுகையில், எனக்கு 67 வயதாகிறது, 23 ஆண்டு தான் கர்நாடகாவில் இருந்தேன் எஞ்சிய 44 ஆண்டுகள் தமிழ்நாட்டில் உங்கள் கூடவே வளர்ந்தேன். கர்நாடகத்தில் இருந்து மாராட்டியராக வந்திருந்தாலும் பேரும் புகழும் அள்ளிக்கொடுத்து என்னை தமிழனாக்கி விட்டீர்கள், அதனால் நான் பச்சைத் தமிழன்".

"என்னை எங்கேயாவது போ என்று வெளியே தூக்கிப் போட்டால் இமயமலையில் தான் வீழ்வேனே தவிர வேறு மாநிலத்திற்கு போக மாட்டேன். உயிரோடு இருந்தால் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும், இல்லாவிடில் சிவன் இருக்கும் இமயமலைக்கு செல்ல வேண்டும். என்னை வாழ வைத்து அழகு பார்த்த உங்களை விட்டு நான் ஏன் செல்ல வேண்டும்" என்றார் ரஜினிகாந்த்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rajinikanth puts fullstop and said that as he is living in Tamilnadu over 44 years he is a Tamilian
Please Wait while comments are loading...