For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசியலுக்கு வந்தார் ரஜினிகாந்த்.. கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என அறிவிப்பு!

நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    அரசியலுக்கு வருவது உறுதி... ரஜினியின் பரபரப்பு பேச்சு

    சென்னை : நான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக ரஜினி அறிவித்தார்.

    கடந்த 20 ஆண்டுகளாக ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பிடி கொடுக்காமல் இருந்தார்.

    எனினும் 1996-ஆம் ஆண்டு திமுக- தமாகா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார் ரஜினி. இதையடுத்து அவரது வாய்ஸ் எடுபடவில்லை. பின்னர் ரஜினியும் அரசியல் குறித்து பேசுவதை நிறுத்திக் கொண்டார்.

    ரஜினி பேச்சு

    ரஜினி பேச்சு

    ரஜினிகாந்த் கடந்த 26-ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவர் முதல் நாளன்று தனது அரசியல் நிலைப்பாடு குறித்து 31-ஆம் தேதி அறிவிக்க போவதாக ரஜினி கூறியிருந்தார்.

    ரஜினியின் பேச்சு

    ரஜினியின் பேச்சு

    ரசிகர்களுடனான சந்திப்பில் கடைசி நாளான இன்று ரஜினி பேசுகையில், நான் பில்ட்அப் கொடுக்கவில்லை, தானாக ஆகிவிட்டது. எனக்கு அரசியல் கூட பயமில்லை, மீடியாவைை பார்த்தால்தான் பயம்.

    சோ இருந்திருந்தால்...

    சோ இருந்திருந்தால்...

    பெரிய ஜாம்பவான்களே மீடியாவை பார்த்து பயப்படுகிறார்கள், நான் குழந்தை. சோ சார் எனக்கு மீடியாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என பயம்காட்டி வைத்திருந்தார். இப்போது சோ இருந்திருந்தால் எனக்கு 10 யானை பலமாக இருந்திருக்கும்.

    யுத்தம் செய்...

    யுத்தம் செய்...

    சோ ஆத்மா எனக்கு பலமாக இருக்கும். கடமையை செய், மற்றதை நான் பார்க்கிறேன் என்றார் கண்ணன். யுத்தம் செய், வெற்றி பெற்றால் நாடாள்வாய். யுத்தத்தில் தோற்றால் இறப்பாய்.

    அரசியலுக்கு வருவது உறுதி

    அரசியலுக்கு வருவது உறுதி

    யுத்தம் செய்யாவிட்டால் கோழை என்பார்கள். நான் அரசியலுக்கு வருவது உறுதி. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன்.காலம் மிக குறைவாக உள்ளதால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை.

    பணம், பெயர் வேண்டாம்

    பணம், பெயர் வேண்டாம்

    நாடாளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில் நான் முடிவெடுப்பேன். பணத்திற்கோ, பெயருக்கோ, புகழுக்கோ வரவில்லை. 45 வயதிலேயே எனக்கு பதவி ஆசை இல்லை.
    68 வயதில் பதவி ஆசை வருமா. அப்படி வந்தால் நான் பைத்தியக்காரன்.

    பதவி ஆசை இல்லை

    பதவி ஆசை இல்லை

    நான் ஆன்மீகவாதி என கூறுவதற்கு தகுதியற்றவன். பதவி ஆசை இருந்திருந்தால் 1996-லேயே பதவி என்னை தேடி வந்தது. எனக்கு பணம் சம்பாதிக்கும் எண்ணமும் இல்லை. நானே எதிர்பார்க்காத 1000 மடங்கு பணத்தை என்னை வாழ வைத்த தமிழக மக்கள் தெரிவித்து விட்டனர்.

    வலுப்படுத்த வேண்டும்

    வலுப்படுத்த வேண்டும்

    இப்போதைக்கு விமர்சனங்கள் செய்யப்போவதில்லை. சட்டசபை எப்போது வருகிறதோ அதற்கு முன்பு உரிய நேரத்தில் கட்சி ஆரம்பிப்போம். நாங்கள் எதை எதை செய்யப்போகிறோம் என்பதை முதலிலேயே அறிவிப்போம். செய்ய முடியாவிட்டால் 3 வருடங்களில் ராஜினாமா செய்வோம் என வாக்குறுதி அளிப்போம். நமது தாரக மந்திரம் உண்மை, உழைப்பு, உயர்வு. ஒவ்வொரு கிராமங்களிலும், தெருக்களிலும் மன்றங்களை வலுப்படுத்த வேண்டும்

    குற்ற உணர்வு

    குற்ற உணர்வு

    என்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றால் அந்த குற்ற உணர்வு என்னை துரத்தும். எல்லாவற்றையும் மாற்றனும், நேர்மையான, வெளிப்படையான ஆன்மீக அரசியலை கொண்டுவர வேண்டும். கட்சியை ஆரம்பித்து தேர்தலை சந்தித்து ஆட்சியை பிடிப்பது நடுக்கடலில் முத்தெடுப்பதை போன்ற கஷ்டமானது. ஆண்டவன் அருள், மக்கள் அன்பு, ஆதரவு இருந்தால்தான் இதை சாதிக்க முடியும். இரண்டுமே எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது என்றார் ரஜினி.

    English summary
    Rajinikanth says that he will come to politics.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X