7 தமிழர் விடுதலை இப்போது ஆளுநர் கையில்.. மறுப்பாரா, ஏற்பாரா?
சென்னை: 7 தமிழர்கள் விடுதலை விவகாரம் இப்போது ஆளுநர் கையில்தான் உள்ளது. அனைவர் கவனமும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நோக்கி மாறியுள்ளது.
ஏனெனில், தமிழக அமைச்சரவை இன்று, 7 தமிழர்களை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

"இது மாநில அரசின் அதிகாரத்திற்குள் வருகிறது. 161வது பிரிவின்கீழ் மாநில அரசு பரிந்துரை செய்ததை ஆளுநர் ஏற்றுதான் ஆக வேண்டும். ஆளுநர் என்பவர் தமிழக அரசின் பிரதிநிதி. எனவே தமிழக அரசின் ஆணையை, அவர் ஏற்றுதான் ஆக வேண்டும்" என்று உறுதியாக தெரிவித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.
மேலும், ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவை கூடியுள்ளது என்பதை வைத்தே நாங்கள் எந்த அளவுக்கு இதில் அக்கறை காட்டுகிறோம் என்பதை புரிந்து கொள்ளலாம். அமைச்சரவை தீர்மானம் உடனடியாக இன்றே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.
இதையடுத்து தீர்மானம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் எப்போது வேண்டுமானாலும், ஆளுநர் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட கூடும் என்று தெரிகிறது. எனவே இப்போது ஆளுநர் மீது அனைவர் கவனமும் சென்றுள்ளது.
ராஜிவ் கொலை வழக்கில், காங்கிரஸ் கட்சி தலைமையே, அமைதியாக உள்ளது. எனவே, மத்திய அரசு, தமிழக அரசின் இந்த முடிவிற்கு எதிராக செயல்பட கூடாது என்றே ஆளுநருக்கு பரிந்துரைக்கும் என தெரிகிறது.
எனவே 7 தமிழர் விடுதலை என்பது ஏறத்தாழ நிச்சயமாகியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications