For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமமோகன ராவ் சஸ்பெண்ட்.. உத்தரவை பெற்றுக்கொண்டார் உதவியாளர்! காரிலிருந்து சைரன் அகற்றம்

தமிழக புதிய புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார். நியமன உத்தரவு வெளியான சில நிமிடங்களில், ராம மோகன ராவ் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக உத்தரவு வெளியானது.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ராம மோகன ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த தமிழக அரசின் உத்தரவு கடிதத்தை அவரது உதவியாளர் பெற்றுக் கொண்டார்.

தலைமைச் செயலாளராக பதவி வகித்த ராம மோகனராவ் வீடு மற்றும் உறவினர்களின் வீடு, அலுவலகங்களில் நேற்று வருமான வரித்துறை ரெய்டுகள் நடத்தியது. தமிழக வரலாற்றிலேயே தலைமைச் செயலர் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது இதுவே முதல் முறை. எனவே அவரை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் கோரிக்கைவிடுத்தன.

Rama Mohana Rao has been placed under suspension following IT raids

இந்த நிலையில், தமிழக புதிய புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார். ஆனால் அந்த உத்தரவில் ராமமோகன ராவ் என்ன ஆனார் என குறிப்பிடவில்லை. நியமன உத்தரவு வெளியான சில நிமிடங்களில், ராம மோகன ராவ் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக உத்தரவு வெளியானது. 45 நாட்களுக்கு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அனுப்பிய சஸ்பெண்ட் உத்தரவு கடிதத்தை ராம மோகன ராவ் உதவியாளர் பெற்றுக்கொண்டார். இதையடுத்து ராமமோகன ராவ் காரிலிருந்து சைரன் அகற்றப்பட்டது. அது அரசு உயர் அதிகாரிகளுக்கான சைரன் என்பதால் அகற்றப்பட்டது.

English summary
Former Chief Secretary P Rama Mohana Rao has been placed under suspension following IT raids.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X