சட்டியுமில்ல, பருப்புமில்ல, எண்ணெய்யுமில்ல.. ஆனாலும் வடை சுடுகிறார்கள்.. யாரை சொல்கிறார் ராமதாஸ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் சிலர் வானலியே இல்லாமல் வடை சுடுவதாக தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் தலைவர்களில் டிவிட்டர் வலைதளத்தை அதிகம் பயன்படுத்தும் தலைவர்களில் ஒருவர் ராமதாஸ். அரசை விமர்சிப்பதாக இருந்தாலும் சரி ஆட்சியாளர்களை சாடுவதாகவும் இருந்தாலும் சரி டிவிட்டரை ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார்.

Ramadoss slams Rajinikanth for his political arrival

இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் ராமதாஸ் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது வானலி இல்லை, உளுத்தம் பருப்பும் இல்லை, எண்ணெயும் இல்லை, ஆனாலும் இங்கு வடை சுடுகிறார்கள்.

இதற்கும் இன்றைய தமிழக அரசியலுக்கும் என்ன சம்பந்தம்? என்றும அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை பலரும் விமர்சத்து வரும் நிலையில் ராமதாஸ் யாரை குறிப்பிட்டு இந்த டிவிட்டை போட்டுள்ளார் என தெளிவாக குறிப்பிடவில்லை.

ஆனால் அவரது டிவிட்டுக்கு பதிலளித்துள்ள பலர் அவர் ரஜினிகாந்த்தை விமர்சித்தே இந்த டிவிட்டை பதிவிட்டுள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
Ramadoss says that There is no Kadai, no grams, no oil, but some makes vada. what is the relationship between them and Tamilnadu politics.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற