ராமநாதபுரத்தில் மின்வாரியத்தையும் ஊராட்சியையும் கண்டித்து நூதனப் போராட்டம் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: தெருவிளக்குகள் எரியாததாலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதைக் கண்டித்தும் கிராம மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுர, மாரியூர் ஊராட்சிக்குடபட்ட பல கிராமங்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இதுகுறித்து ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Ramanathapuram people done protest in different way

மேலும், அப்பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு தீப்பந்தம் ஏந்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தெருவிளக்கு கம்பங்களில் தீப்பந்தங்களைக் கட்டி வைத்தும் போராடினர்.

மின்வெட்டு குறித்து மின்சார வாரியத்தில் புகார் அளித்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் ஊரே இருட்டாக இருப்பதால் பலவிதமான சமூக விரோதச் செயல்கள் நடப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Near Ramanathapuram lot of villages not getting lights and electricity and people protested for that

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற