ரூ.1 கோடி அபராதத்தை கீழடி அகழ்வாராய்ச்சிக்கு கொடுங்க.. தமிழக அரசுக்கு நீதிபதி பலே உத்தரவு
மருத்துவ கல்லூரிகளின் இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசுக்கு விதிக்கப்பட்ட ரூ.1 கோடி அபராதத்தை கீழடி அகழ்வாராய்ச்சி பணிக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை: மருத்துவ கல்லூரிகளின் மேல் படிப்புக்கான இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசுக்கு விதிக்கப்பட்ட ரூ.1 கோடி அபராதத்தை கீழடி அகழ்வாராய்ச்சி பணிக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு ஒதுக்காததை கண்டித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நாமக்கல் டாக்டர் காமராஜ் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கானது இன்று நீதிபதி கிருபாகரன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அரசு இடஒதுக்கீட்டை கேட்டு பெறாமல் தமிழக அரசு மெத்தனம் காட்டியதால் தகுதி உள்ளவர் எம்.டி., எம்.எஸ். சேர முடியவில்லை.
மேலும் அரசு ஒதுக்கீட்டு இடங்களை ஒப்படைக்காத கல்லூரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தமிழக அரசுக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
அதேபோல் விதிகளை மீறும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்காத இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. தமிழக அரசின் அபராதத்தை சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சி பணிக்கும், மருத்துவ கவுன்சிலுக்கு விதித்த ரூ.1 கோடியை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்திற்கும் பயன்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications