பயணிகளை நடுவழியில் இறக்கிய ஓட்டுனர்களும், நடத்துனர்களும் நீக்கப்படணும்.. எஸ்.வி.சேகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தமிழக அரசு போக்குவரத்து நஷ்டத்தில் இயங்க என்ன காரணம் ? போராட்டம் எதனால் ?- வீடியோ

  சென்னை: ஊதிய உயர்வு பிரச்சினையில் சுமூக முடிவு எட்டப்படாததால் பயணிகளை இரக்கமின்றி நடுவழியில் இறக்கிவிட்ட ஓட்டுனர்களையும், நடத்துனர்களையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று எஸ்.வி.சேகர் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

  ஊதிய உயர்வு, நிலுவை தொகை, குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 மாதங்களாக தமிழக அரசுடன் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தன.

  S.Ve.Shekher demands to dismiss the trasnport workers who involved in strike

  எனினும் பேச்சுவார்த்தையில் அரசு ஒப்புக் கொண்ட அறிவிப்புகள் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இதையடுத்து நேற்று மாலை இருட்டும் நேரம் என்று பாராமல் மாணவிகள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் பாதியிலேயே இறக்கவிடப்பட்டனர்.

  இந்நிலையில் இன்றும் ஸ்டிரைக் தொடருவதால் பேருந்துகள் இல்லாமல் பயணிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், தனியார்மயமாக்கப்படுவதில் முதலிடத்துக்கு அரசு போக்குவரத்து கழகங்கள் தள்ளப்பட வேண்டும்.

  நேற்று பாதி வழியில் பயணிகளை ஈவிரக்கமின்றி இறக்கிவிட்ட ஓட்டுனர்களும் நடத்துனர்களும் வேலை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  S.Ve.Shekher tweets that Government transport corporations should be in the top list for privatalisation. The drivers and conductors should be dismissed from their jobs for the made get downing the passengers in middle of their journey.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற