For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தவறு நடந்து விட்டது... மன்னிப்பு கேட்டேன்... ஒன்இந்தியா தமிழுக்கு எஸ்வி சேகர் விளக்கம்

தவறு நடந்துவிட்டது , மன்னிப்பு கேட்டுவிட்டேன் என்று எஸ் வி சேகர் ஒன் இந்தியா தமிழுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    மன்னிக்கவும்... பேஸ்புக் பதிவு குறித்து எஸ் வி சேகர்- வீடியோ

    சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் குறித்த பேஸ்புக் பதிவை படித்து பார்க்காமல் பார்வார்டு செய்துவிட்டேன், மன்னிப்பும் கேட்டுவிட்டேன், அவ்வளவுதான் என்று எஸ் வி சேகர் ஒன்இந்தியா தமிழ் தளத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.

    தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கன்னத்தில் தட்டிய விவகாரத்துக்கு பெண் நிருபர் லட்சுமி எதிர்ப்பு காட்டினார். இதற்கு ஆளுநர் மன்னிப்பு கேட்டுவிட்டாலும் அதற்கான காரணங்களை ஏற்க முடியாது என்று லட்சுமி கூறியிருந்தார்.

    கடும் கண்டனம்

    இந்நிலையில் பெண் பத்திரிகையாளர்களை மிகவும் கீழ்த்தரமான வகையில் நேற்றைய தினம் எஸ்வி சேகர் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    பார்வார்டு மெசேஜ்

    பார்வார்டு மெசேஜ்

    எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அந்த பதிவுக்கு எஸ்வி சேகர் மன்னிப்பு கேட்டு அறிக்கை அனுப்பியுள்ளார். இதுகுறித்து ஒன்இந்தியா தமிழ் தளத்துக்கு அவர் பேட்டி அளிக்கையில், உள்நோக்கத்துடன் செய்யவில்லை. பார்வர்ட் மெசேஜ் படிக்காமல் போட்டு விட்டேன். தவறு நடந்து விட்டது. தெரிந்து செய்யவில்லை.

    தவறான தகவல்கள்

    தவறான தகவல்கள்

    தெரியாமல் செய்திருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இத்தனை வருடமாக பத்திரிகைத்துறையில் பணியாற்றியுள்ளேன். மேடைகளில் பேசியுள்ளேன். தவறாகப் பேசியுள்ளதைப் பார்த்துள்ளீர்களா. எனது பேஸ்புக்கில் தவறான தகவல்களை பதிவிட்டுள்ளேனா.

    அவ்வளவுதான்

    அவ்வளவுதான்

    ஜெயலலிதா இறந்ததை கூட தவறாக அறிவித்தவர்கள்தானே பத்திரிகையாளர்கள். அது மாதிரிதான் இதுவும். தவறாக பதிவு செய்துவிட்டேன், மன்னிப்பு கேட்டுவிட்டேன், அவ்வளவுதான் என்று எஸ் வி சேகர் விளக்கம் அளித்துள்ளார்.

    English summary
    S.Ve.Shekher says that the facebook which was forwarded by him wrongly, he apologises for it. There is no intention on the post, he adds.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X