மெர்சலை கலாய்க்க நினைத்து, வாங்கி கட்டிக் கொண்ட எஸ்.வி.சேகர்!
மெர்சல் குறித்து டுவிட்டரில் கேள்வி கேட்ட எஸ்.வி.சேகருக்கு அதிர வைக்கும் பதில்களை டுவீட்டியுள்ளனர் நெட்டிசன்கள்.
Recommended Video

சென்னை : இந்த ஆண்டின் சிறந்த காபி பேஸ்ட் நிபுணர் யார் என்று டுவிட்டரில் கேள்வி கேட்ட எஸ்.வி.சேகரை நெட்டிசன்கள் செமையாக கலாய்த்துத் தள்ளிவிட்டனர்.
மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி குறித்து வரும் வசனங்களை நீக்க வேண்டும் என்று பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் திரியை கொளுத்திப் போட்டார். இந்தத் திரி தீ பிடித்து இப்போது பாஜகவின் மத்தத் தலைவர்கள் அனைவரும் மெர்சல் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழிசையைத் தொடர்ந்து இல.கணேசன், பொன். ராதாகிருஷ்ணன், எச். ராஜா உள்ளிட்டோர் மெர்சல் படத்திற்கு எதிரான தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகரும் மெர்சல் படத்தை மறைமுகமாக கிண்டலடிக்கும் விதமாக இந்த ஆண்டின் சிறந்த 'காபி & பேஸ்ட்' நிபுணர் யாரு? என்று கேட்டு ஒரு டுவீட்டை தட்டி விட்டிருந்தார். அட்லி பல படங்களின் காட்சிகளை மெர்சல் படத்தில் காண்பித்ததாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
|
பாஜவை அலறவிட்ட அட்லி
எஸ்.வி.சேகரின் இந்த டூவீட்டிற்கு பலர் பதிலை பறக்க விட்டுள்ளனர். ஒட்டுமொத்த பா.ஜ.க வையும் இப்டி மொளகாப்பொடிய மூஞ்சில தூவினாப்ல கதறவிட்ட அட்லி தான்.. இன்னும் நல்லா கதறுங்க..உங்க புண்ணியத்துல படம் இன்னும் ரெண்டு நாள் முன்னாடியே நூறு கோடி கலெக்ட் பன்னிடும் என்று நக்கலடித்துள்ளார் இவர்.
|
மோடியரசு தான்
காங்கிரசின் திட்டங்களை 3 வருடமாக காப்பியடிக்கும் பாஜக தான் என்று மற்றொரு நெட்டிசன் கலாய்த்துள்ளார். திட்டங்களின் பெயர்களை மட்டும் மாற்றி புதுத்திட்டமாகக் காண்பித்த மோடியரசுதான் அது என்று அவர் பதிவிட்டுள்ளார்.
|
மொக்க மணல் கயிறு
மெர்சல் படத்தை கிண்டலடித்திருக்கும் எஸ்.வி. சேகர், அவருடைய மகன் படத்தை பார்க்க வேண்டும் என்று பதில் பதிவிட்டுள்ளார் இந்த வலைபதிவாளர். உங்க பையன் நடிச்ச மொக்க மணல் கயிறு பாருங்க என்று பதில் டுவீட்டியுள்ளார்.
|
கட்சித் தாவல் நிபுணர் யார்?
கட்சி விட்டு கட்சி மாறிய எஸ்.வி.சேகருக்கே ஒரு கேள்வி கேட்டுள்ளார் இந்த நெட்டிசன். ஆமா அஇஅதிமுக டூ பாஜக கட்சிதாவல் நிபுணர் யாரோ ?? என்று அவர் பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications