ஜீ தமிழ் டிவியின் ச ரி க ம பா லிட்டில் சாம்ப்ஸ் இறுதிப்போட்டி... நேரடியாக ரசிக்கத் தயாரா?
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்‘ச ரி க ம பா லிட்டில் சாம்ப்ஸ்’ நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று, சென்னையில், ஏப்ரல் 28 அன்று நடைபெறுகிறது!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரசித்தி பெற்ற 'ச ரி க ம பா லிட்டில் சாம்ப்ஸ்' இசை நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று மிகப் பிரமாண்ட முறையில் ஏப்ரல் 28 அன்று மாலை 6 மணிக்கு சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
இசையை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதுவும் குழந்தைகள் பாடினால் கேளாத செவிகள் இருக்குமோ? ஜீ தமிழ் டிவியில் சின்னஞ்சிறு குழந்தைகள் பாடும் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் 5 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் பங்கேற்கின்றனர்.
இந்நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இது நேரடியாக அரங்கேற உள்ளது. இதுவரை நேயர்கள் கண்டிராத சுற்றுகள் மூலம், போட்டியாளர்களின் இசைத் திறமைகள் வெளிப்படவுள்ளது.

5 போட்டியாளர்கள்
தமிழகம் முழுக்க நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் 30 குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களில் 15 சிறந்த போட்டியாளர்கள் ச ரி க ம பா லிட்டில் சாம்ப்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் ஆரம்பச் சுற்றுகளில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றிற்கு தகுதி பெற்ற 5 போட்டியாளர்கள் காந்தக் குரலில் பாடி நேயர்களைப் பரவசப்படுத்த உள்ளனர்.

பிரபலங்கள் பங்கேற்பு
இந்த இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர்களான உஷா உதூப், ஸ்ரீநிவாஸ், உன்னி கிருஷ்ணன், எல்.ஆர். ஈஸ்வரி மற்றும் நடிகரும், இசை அமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் முந்தைய சுற்றுகளில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபக் - அர்ச்சனா
இந்த இறுதிச் சுற்று நிகழ்ச்சியில், மனதைக் கவரும் பத்துப் பாடல்களும் மற்றும் இரண்டு பெப்பி நடன நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களின் கண்களுக்கும், செவிகளுக்கும் விருந்தளிக்க உள்ளன. தீபக், அர்ச்சனா ஆகிய இருவரும் இந்நிகழ்ச்சியை நேயர்கள் முன்னிலையில் தொகுத்து வழங்குகின்றனர்.

வெற்றி பெறப்போவது யார்?
ஆரம்பம் முதலே `ச ரி க ம பா லிட்டில் சாம்ப்ஸ்' நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்து வரும் பிரபல பின்னணி பாடகி சுஜாதா, பின்னணி பாடகர்கள் கார்த்திக், விஜய் பிரகாஷ் ஆகியோர் இந்த இறுதிச் சுற்று நிகழ்ச்சியில் தகுதி உடைய குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து வெற்றியாளர்களாக அறிவிக்க உள்ளனர்.

ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பு
இறுதிச் சுற்று நிகழ்ச்சி மே 7ஆம் தேதி, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை ஜீ தமிழ் தொலைக்காட்சில் ஒளிபரப்பாக உள்ளது. தீபக், அர்ச்சனா ஆகிய இருவரும் இந்நிகழ்ச்சியை நேயர்கள் முன்னிலையில் தொகுத்து வழங்குகின்றனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications