For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவிலில் கொடை விழா வேட்டையாடப் போன சாமியாடி திடீர் மாயம்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கோவில் கொடை விழாவில் வேட்டையாடி சென்ற கோவில் சாமியாடி மாயமாகிய சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்க நல்லூர் கருங்குலத்தில் கள்ளாண்டவன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் கொடைவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் வழக்கம் போல் கோவில் கொடை நேற்றுத் தொடங்கி நடைப் பெற்றுவருகிறது.

சாம பூஜை, நள்ளிரவு 12.30மணியளவில் நடைபெற்றது.அப்போது சாமிக்கு படைப்பு சோறு போட்டு பூஜை நடந்தது. கோவில் சாமியாடி பண்டாரம் என்பவர் தான் வருடம் தோறும் நள்ளிரவில் சாமிக்கு திரனை கொடுக்க (வேட்டைக்கு) செல்வது வழக்கம்.

இந்தாண்டு அவருக்குப் பதில் அதே ஊரைசார்ந்த பெருமாள் என்ற சாமியாடி சாமிக்கு திரனைக் கொடுக்க (வேட்டையாட)தனியாக கையில் தீ பந்தம் ஏந்தி சென்றார். நள்ளிரவு நேரம் தாமிரபரணி நதிக்கரையில் போய் திரனை கொடுக்க சென்றவர் வெகு நேரமாகியும் திரும்பாததால் திருவிழாவுக்கு வந்தவர்கள், ஊர் மக்கள் மத்தியில் பதட்டமும்,உருவானது.

நள்ளிரவில் அவரை தேடி சென்றனர்.ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் இல்லாததால் போலீசில் புகார் செய்துள்ளனர்.

English summary
A 'Saamiyaadi' gone missing near Tuticorin during a temple festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X