மறுபடியும் எச்.ராஜாவின் தூக்கத்தை கெடுக்கும் விஜய்! தெறிக்க விடும் சர்கார் பாடல்
Recommended Video

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாக உள்ள சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் இணையதளத்தை தெறிக்கவிட்டுள்ளது.
இதற்கு காரணம், பாடலில் இடம் பெற்றுள்ள ஆழ்ந்த அரசியல் வரிகள்தான். ஏற்கனவே, துப்பாக்கி, கத்தி ஆகிய ஏ.ஆர்.முருகதாசின் இரு திரைப்படங்களுமே அரசியல் பேசியிருந்த நிலையில், சர்கார் அதையும் தூக்கி சாப்பிடும் வகையிலான ஒரு படம் என்பதை இந்த பாடல் வரிகள் உணர்த்துகின்றன.
ஒரு விரல் புரட்சியே என்ற இரண்டாவது சிங்கிள் டிராக் நேற்று வெளியிடப்பட்டது. அந்த பாடலில்தான் மேற்சொன்ன அம்சங்கள் உள்ளன.

ஒரு விரல் புரட்சியே
ஏ.ஆர்.ரகுமான் இசையில், விவேக் எழுதியுள்ள நேற்றுவரை ஏமாளி, இன்று முதல் போராளி என்று துவங்கும் இந்த பாடலில், கடுமையான அரசியல் வரிகள் இடம் பெற்றுள்ளன என்றுதான் சொல்ல வேண்டும். இந்த பாடலை ஏ.ஆர்.ரகுமானுடன், ஸ்ரீநிதி வெங்கடேஷ் இணைந்து இப்பாடலை பாடியுள்ளார். பாடலில் இடம் பெற்றுள்ள வரிகளை பாருங்கள், ஏன் இந்த பாடல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது புரியும்
[அப்ப இத்தனை நாளா மதுரை மதுரைன்னு சொல்லிட்டிருந்தது எல்லாமே டூப்பா கோப்பால்?? ]

ஏழையை ஒழிப்பதே
ஒருவிரல் புரட்சியே.. இருக்குதா உணர்ச்சியே.. ஏழ்மையை ஒழிக்கவே.., செய்யடா முயற்சியே, ஏழையை ஒழிப்பதே உங்களின் வளர்ச்சியா..? திருப்பியடிக்க இருக்கு நெருப்பு, விரலின் நுனியில் விழட்டும் கருப்பு, உன்முறை ஐயோ ஏன் தூங்கினாய், காசை பெற்று பின் ஏங்கினாய், மானம் விற்று எதை வாங்கினாய்?

போர்களை தாண்டித்தான்
நாம் ஒன்றாய் கேள்விகள் கேட்டாலே, அடக்கும் கை அங்கு நடுங்காதோ, எளிய மனிதன் எழுதும் விதியிலே, புதிய உலகம் தொடங்காதோ? கறை வேட்டிகள் அங்கங்கு சிலை, எங்கள் வியர்வையும், ரத்தமும் விலை, வெறும் வேதனையே இங்கு நிலை, எழு மாற்றப்பறவையே, நீதியை கொல்கிறான், மவுனமாய் போகிறோம், ஊமைகள் தேசத்தில், காதையும் மூடினோம். மக்களின் ஆட்சியாம், எங்கு நாம் ஆழ்கிறோம், போர்களை தாண்டித்தான், சோற்றையே காண்கிறோம். துரோகங்கள் தாக்கியே வீதியில் சாகிறோம், அழுதிடும் கண்களில் தீயென வாழ்கிறோம். இப்படி உள்ளது பாடல் வரிகள்.

பாஜக தலைவர்கள்
ஏற்கனவே அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிக்காக, ஜோசப் விஜய் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் எச்.ராஜாவால் விமர்சனம் செய்யப்பட்டார் விஜய். பாஜக தலைவர்களின் விமர்சனங்களால் இலவச விளம்பரம் கிடைக்கப்பெற்ற மெர்சல் திரைப்படம், வசூலை கொடுத்தது. இந்த நிலையைில், சர்கார் படத்திற்கோ, அல்லது இந்த பாடலுக்கோ பாஜக தரப்பில் ஏதேனும் விமர்சனங்கள் வரக்கூடும் என்று தெரிகிறது.

பாஜக தலைவர்கள்
ஏற்கனவே அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிக்காக, ஜோசப் விஜய் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் எச்.ராஜாவால் விமர்சனம் செய்யப்பட்டார் விஜய். பாஜக தலைவர்களின் விமர்சனங்களால் இலவச விளம்பரம் கிடைக்கப்பெற்ற மெர்சல் திரைப்படம், வசூலை கொடுத்தது. இந்த நிலையைில், சர்கார் படத்திற்கோ, அல்லது இந்த பாடலுக்கோ பாஜக தரப்பில் ஏதேனும் விமர்சனங்கள் வரக்கூடும் என்று தெரிகிறது.

தலைவா விவகாரம்
ஏற்கனவே தலைவா என்று படப்பெயர் வைத்ததற்காக, அந்த படத்தை ரிலீஸ் செய்ய விடாமல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தொல்லைகள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும், தைரியமாக அரசியல் வரிகளுடன் சர்கார் திரைப்படத்தில் பாடல்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட்












Click it and Unblock the Notifications