For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுகவிற்கு தலைமையேற்க சசிகலாவை அழைத்த ஓபிஎஸ்- சம்மதம் சொன்ன சசிகலா

அதிமுகவிற்கு தலைமையேற்க வருமாறு போயஸ் தோட்டத்தில் சசிகலாவை சந்தித்து ஓபிஎஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கண்களில் நீர் கசிய அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று வானகரத்தில் நடைபெற்றது. பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதுடன் நாடாளுமன்ற வளாகத்தில் சிலை நிறுவ வேண்டும். உலக அமைதிக்கான நோபல் பரிசு, மகசேசே விருது வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

சசிகலா தேர்வு

சசிகலா தேர்வு

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்தும், அதிமுகவின் தலைமை பொறுப்பை சசிகலாவிடம் ஒப்படைத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானம் பொதுக் குழுவில் ஒருமனதாக நிறைவேறியது.

சசிகலா உடன் சந்திப்பு

சசிகலா உடன் சந்திப்பு

அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் ஓ. பன்னீர்ச் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, தம்பிதுரை உள்பட முக்கிய நிர்வாகிகள் போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சத்தித்தனர். அப்போது பொதுக்குழு தீர்மானத்தை சசிகலாவிடம் வழங்கி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

ஜெயலலிதா படத்தின் முன்

ஜெயலலிதா படத்தின் முன்

ஜெயலலிதாவின் புகைப்படத்தின் முன்பு பொதுக்குழுவிற்கான தீர்மான நகலை சசிகலாவிடம் வழங்கினார் ஓ.பன்னீர் செல்வம். அப்போது கண்ணீர் மல்க ஜெயலலிதா படத்தின் முன்பு பெற்றுக் கொண்ட சசிகலா, அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக சம்மதம் தெரிவித்தார்.

சசிகலா சம்மதம்

சசிகலா சம்மதம்

சசிகலா சம்மதம் கூறிவிட்டதாக பொதுக்குழுவில் திண்டுகல் சீனிவாசன் அறிவித்தார். ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று வணங்கிவிட்டு அ.தி.மு.க. தலைமை கழகம் சென்று பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்பார் என்று கூறப்பட்டுள்ளது.

English summary
Sasikala has accepted the ADMK General body meeting resolution on the post of General secretary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X