For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கணவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த கோரி சசிகலா புஷ்பா ஆட்கொணர்வு மனு

அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து போலீஸ் அழைத்துச் சென்ற கணவர் லிங்கேஸ்வரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் அவரின் வழக்கறிஞர் ஆகியோர் புதன்கிழமையன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் அவரின் வழக்கறிஞர், அதிமுகவினரால் சராமாரியாக தாக்கப்பட்டனர். இதில் அவரக்ளுக்கு மண்டை உடைந்து ரத்தம் கசிந்தது.

போலீசார் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மைலாப்பூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டார். அத்துமீறி ஆட்களுடன் வந்து தாக்க முயன்றதாக சிந்து ரவிச்சந்திரன் புகார் அளித்தார். இதையடுத்து ராயபேட்டை போலீசார் லிங்கேஸ்வர திலகர் உட்பட 10 பேர் மீது பிரிவு , ஐபிசி 144 , 448 ,323, 327 , 506(2) வழக்குப்பதிவு செய்தனர்.

Sasikala filed habeas corpus in High court

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்ற என கணவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இப்போது வரைக்கும் அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. காலையில் இருந்து எனது கணவரை தேடிக்கொண்டிருக்கிறேன். இது மனித உரிமை மீறல் என கூறினார் சசிகலா புஷ்பா.

Sasikala filed habeas corpus in High court

தனது கணவர் தாஅக்கப்பட்டது குறித்து அவர் எங்கே இருக்கிறார் என்று சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அலுவலகம் வரை கேட்டும் பதில் இல்லை என்று கூறியுள்ள சசிகலா புஷ்பா இது பற்றி ஆட்கொணர்வு மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் இன்று காலை சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகத்தை ஆஜர்படுத்த வேண்டும், இல்லையேல் அவரது நிலை குறித்து போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

English summary
Rajyasabha mp Sasikala pushpa the wife of Lingeswara Tilagam has approached the Madras high court to direct police to produce her husband before the court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X