ஜெயலலிதா, ஜெயக்குமார்.. தொண்டர்களின் குழந்தைகளுக்கு பெயர் வைத்த சசிகலா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குளோபல் மருத்துவமனை முன்பு திரண்டிருந்த தொண்டர்களிடம் பேசிய சசிகலா இரண்டு குழந்தைகளுக்கு ஜெயலலிதா, ஜெயக்குமார் என பெயர் சூட்டினார்.

சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

Sasikala named two children Jayalalithaa, Jayakumar in front of hospital

கணவர் நடராஜனை காண 5 நாள் பரோலில் வந்தார் சசிகலா. நாள்தோறும் மருத்துவமனைக்கு சென்று கணவரை பார்த்து நலம் விசாரித்தார்.

சசிகலாவை காண்பதற்காக அவரது ஆதரவாளர்கள் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை முன்பு திரண்டு வருகின்றனர். நேற்று மருத்துவமனை முன்பு திரண்டிருந்த தொண்டர்களிடம் உரையாடினார் சசிகலா.

அப்போது அங்கு கொண்டு வரப்பட்ட 2 குழந்தைகளுக்கு ஜெயலலிதா ஜெயக்குமார் என பெயர் சூட்டினார் சசிகலா. சசிகலா அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கக்கூடாது, பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்பது உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளை சிறை நிர்வாகம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sasikala was Speaking to volunteers who had gathered front of Global Hospital. Sasikala named two children Jayalalithaa, Jayakumar in front of hospital.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற