டிடிவி எப்படி சசிகலா புஷ்பாவை சந்திக்கலாம்?- சசி குடும்பத்தில் வெடித்த சர்ச்சை
டிடிவி தினகரனை சசிகலா புஷ்பா சந்தித்து வாழ்த்து கூறியது சசி குடும்பத்தில் உறவினர்களிடையே புகைச்சலை வெடித்துள்ளது.
Recommended Video

சென்னை: டிடிவி தினகரனின் வெற்றிக்கு சசிகலா புஷ்பா நேரில் சந்தித்து வாழ்த்து கூறியது சசிகலா குடும்ப உறவினர்களிடையே புகைச்சலையும், எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு யார் என்பது அவர் இருந்த போதிலிருந்தே சசிகலாவின் அண்ணன், அக்காள் மகன்கள், மகள்களிடையே ஓயாத போராட்டமாக இருந்து வருகிறது.
இளவரசி குடும்ப வாரிசுகளும் அரசியல் ஆசையிலும், கனவிலும் மிதந்து வரும் நிலையில் டிடிவி தினகரனின் வெற்றி சிலரால் ரசிக்க முடியாத நிலையிலேயே இருக்கிறது.

ஜெயலலிதா வாரிசு யார்
ஜெயலலிதாவின் வாரிசு யார் என்று தீபா, தீபக் மல்லுக்கு நிற்க, அம்ருதாவும் கிளம்பி வந்தார். டிஎன்ஏ டெஸ்ட் கேட்டு வரும் அம்ருதாவின் வழக்கு ஹைகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இப்போது திடீரென்று கிருஷ்ணபிரியாவோ தனது வளைகாப்பு புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். இதனை டிடிவி தினகரன் குடும்பத்தினர் ரசிக்கவில்லை.

தினகரனை சந்தித்த புஷ்பா
இந்த நிலையில் தினகரனை சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார் சசிகலா புஷ்பா. இவர்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது சசிகலா குடும்பத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய பேட்டியை தொலைக்காட்சிகளுக்கு கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர். இப்போது தினகரனை சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார்.

துணிச்சல் பிடிச்சிருக்கு
இது குறித்து பேட்டி கொடுத்த டிடிவி தினகரனை, சசிகலா புஷ்பா என்னை நேரடியாக வந்து சந்தித்தார். என்னுடைய துணிச்சல் பிடித்துள்ளது. அனைத்திலும் முன்னிலை பெற்று வருகிறீர்கள். உங்களுடன் இணைந்து கட்சி வேலைகளை பார்க்க வேண்டும் என்று கூறினார். நானும் சரி என்று கூறியுள்ளேன் என்று தெரிவித்தார்.
பழைய சம்பவங்களை மறந்து விட்டு மறப்போம், மன்னிப்போம் என்ற பாலிசியை கடைபிடிக்கலாம் என்று நினைக்கிறார் தினகரன்.

புகைச்சலை கிளப்பிய சந்திப்பு
அதே நேரத்தில் இந்த சந்திப்பினை இளவரசியின் வாரிசுகள் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. கிருஷ்ணபிரியா, விவேக் ஜெயராமன் ஆகியோர் தினகரனுடன் சசிகலா புஷ்பா சந்தித்தது குறித்து சிறையில் உள்ள சசிகலாவிற்கு தகவல் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சசிகலாவை எதிர்த்த சசிகலா புஷ்பாவை சந்தித்து பேசியது ஏன் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். வெற்றி மிதப்பில் இருக்கும் தினகரன் தங்களை ஓரம் கட்ட முயற்சி செய்வதாகவும் சசிகலா குடும்ப உறவினர் கருதுகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications