ஐடி பிடியில் சசி குடும்பத்தின் உறவினர்கள், பினாமிகள் 355 பேர்; 215 சொத்துகள்; 317 வங்கி கணக்குகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமான வரித்துறை அதிகாரிகள் வளையத்தில் சசிகலா குடும்பத்தின் உறவினர்கள், பினாமிகள் என 355 பேர் சிக்கியுள்ளனர். இவர்களது 215 சொத்துகளும் 317 வங்கி கணக்குகளும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

சசிகலா குடும்பத்தினர் அனைவரையும் ஒட்டுமொத்தமாக வளைத்துப் போட்டிருக்கிறது வருமான வரித்துறை. நாடு இதுவரை கண்டிராத மிகப் பெரிய வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது.

Sasikala Relatives, benamies 355 persons Under lens of IT

சசிகலா குடும்பத்தின் ஒட்டுமொத்த நெட் ஒர்க்கையும் குறித்து 2,000 வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகளின் வளையத்தில் சசிகலா குடும்பத்தின் உறவினர்கள், பினாமிகள் 355 பேர் சிக்கியுள்ளனர்.

இவர்களின் மிக முக்கியமான 215 சொத்துகளும் விசாரணை வளையத்தில் சிக்கி உள்ளன. இந்த 215 சொத்துகளும் அனேகமாக முடக்கப்படவே வாய்ப்புள்ளது.

மேலும் 355 பேரின் 317 வங்கி கணக்குகளும் வருமான வரித்துறையிடம் சிக்கியுள்ளன. இவற்றையும் ஐடி அதிகாரிகள் ஆராய உள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
According to the IT sources 215 properties belonging to Sasikala Family and 355 Sasikala relatives, benamies are under the lens of the department.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற