For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எம்எல்ஏக்களை சிறைபிடித்து வைத்துக் கொண்டு ஆளுநரையே மிரட்டும் சசிகலா!

அதிமுக எம்.எல்.ஏக்களை சிறைபிடித்து வைத்துக் கொண்டு தமக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என ஆளுநரை மிரட்டும் தொனியில் கடிதம் அனுப்பியுள்ளார் சசிகலா.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: எம்.எல்.ஏ.க்களை சட்டவிரோதமாக சிறைபிடித்து வைத்துக் கொண்டு முதல்வராகிவிடலாம் என துடியாய் துடிக்கிறார் சசிகலா. இதனால் ஆளுநரை மிரட்டும் வகையில் இன்றே சந்திக்க நேரம் ஒதுக்குங்கள் என கடிதம் அனுப்பியுள்ளார் சசிகலா.

அதிமுகவில் முதல்வர் ஓபிஎஸ் தலைமையிலான அணிக்கு ஆதரவு பெருகிக் கொண்டே வருகிறது. நாடாளுமன்ற எம்பிக்கள் 4 பேர் இதுவரை ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Sasikala threatens TN Governor

தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இப்போது முதல்வர் ஓபிஎஸ் அணியில் இணைந்துள்ளார். ஏற்கனவே 5 எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஓபிஎஸ்ஸை ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர். இதனால் ஓபிஎஸ் அணியில் முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட 7 எம்எல்.ஏக்கள் உள்ளனர்.

இதனிடையே அதிமுக எம்.எல்.ஏக்கள் பலரையும் சிறைபிடித்து வைத்திருக்கிறது மன்னார்குடி கும்பல். இப்படி சிறைபிடித்து வைத்துக் கொண்டு முதல்வராகிவிட வேண்டும் என வெறிபிடித்தவராக இருக்கிறார் சசிகலா.

ஆனால் ஆளுநர் வித்யாசகர் ராவோ அனைத்து தரப்பு ஆலோசனைகளையும் கேட்டு வருகிறார். இந்த நிலையில் ஆளுநரை சந்திக்க இன்றே நேரம் ஒதுக்க வேண்டும் என புலம்பியபடி ஒரு கடிதத்தை எழுதியுள்ளார் சசிகலா.

எம்.எல்.ஏக்கள் சிறைபிடிக்கப்பட்ட விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது; சசிகலா அணியில் இருந்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு வந்துவிட்டார்... இந்த சூழ்நிலையில் சசிகலாவின் வெறித்தனமான பதவி ஆசை நடந்தேறுமா? என்பது கேள்விக்குறியே.

ADMK Interim General Secretary wrote a letter to TamilNadu governor Vidyasagar Rao.

எம்.எல்.ஏ.க்களை சட்டவிரோதமாக சிறைபிடித்து வைத்துக் கொண்டு முதல்வராகிவிடலாம் என துடியாய் துடிக்கிறார் சசிகலா. இதனால் ஆளுநரை மிரட்டும் வகையில் இன்றே சந்திக்க நேரம் ஒதுக்குங்கள் என கடிதம் அனுப்பியுள்ளார் சசிகலா.

English summary
ADMK Interim General Secretary wrote a letter to TamilNadu governor Vidyasagar Rao.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X