சத்தியில் வேன் மோதி இளைஞர் மரணம்... போலீசை கண்டித்து போராட்டம் : வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஈரோடு: இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து எற்படுத்திய மினி வேன் டிரைவர் மீது கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்காத போலீசாரை கண்டித்து பொது மக்கள் சத்தியமங்கலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

கோவை, ஈரோடு சாலையில் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள புங்கம்பள்ளி என்ற இடத்தில் ஜெயராஜ் என்பவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மினிவேன் ஒன்று மோதியது. அதையடுத்து ஜெயராஜ் அதே இடத்தில் பலியானார்.

Sathyamanglam people protested against police

விபத்து நடந்திருப்பதை அறிந்து அங்கு வந்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய மினி வேனை எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால், விபத்து ஏற்படுத்தி ஒருவர் உயிரிழக்க காரணமான ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தவில்லை. இதனால் கோபமடைந்த ஊர்மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Sathyamangalam: Farmers protest against police SI - Oneindia Tamil

அப்போது சமாதனப் பேச்சுவார்த்தைக்கு வந்த போலீசாரிடம் மினி வேன் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி நெடுநேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் உண்டானது. போலீசார் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Sathyamanglam main road people staged a protest against police who did not take action against the driver who made accident.
Please Wait while comments are loading...