For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி உபரி நீரை சேலம் மாவட்டம் ஏரிகளில் நிரப்பும் திட்டம்.. டெல்டா விவசாயிகள் எதிர்ப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    கரூர்: காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு... வீணாகும் பல்லாயிரக் கணக்கான லிட்டர் தண்ணீர்...

    பட்டுக்கோட்டை: காவிரி ஆற்றில் உபரியாக செல்லும் நீரை பயன்படுத்தி ரூ.565 கோடியில், 100 ஏரிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு டெல்டா விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    தமிழக முதல்வரின் அறிவிப்பு கர்நாடகத்தின் செயலை விட மிக பாதகமானது என டெல்டா மாவட்ட விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர் முதல்வர் அறிவித்த திட்டப்படி தடுப்பணைகளை கட்டி ஏரி, குளங்களை நிரப்பினால் ஒரு சொட்டு தண்ணீர் கூட கல்லணைக்கு வந்து சேராத சூழல் ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

    Scheme for filling Cauvery water in Salem district lakes.. Delta Farmers opposed

    முன்னதாக சமீபத்தில் சேலத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி ஓமலூர், மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில்100 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது

    காவிரியில் உபரிநீர் வரும் காலத்தில், அங்கேயிருந்து சொட்டுநீர் பாசனம் மூலமாக எடுத்துச் சென்று அந்த தண்ணீர் ஏரிகளில் நிரப்பப்படும். இத்திட்டத்தால் டெல்டா விவசாயிகள் சிறிதும் பாதிக்கப்பட மாட்டார்கள்

    விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு பயனளிக்க கூடிய பல திட்டங்களை நம்முடைய அரசு இந்த சேலம் மாவட்ட மக்களுக்கு அர்ப்பணித்திருக்கிறது என பேசினார்.

    இதனிடையே பட்டுக்கோட்டையில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் முதல்வரின் மேற்கண்ட திட்ட அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்

    பின்னர் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து விவசாயிகளும் காவிரியின் குறுக்கே கதவணை கட்டும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.

    English summary
    Delta farmers have condemned the CM's announcement that the project would carry water to 100 lakes at Rs 565 crore using surplus water in the kaveri River.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X