அந்தியூரில் பரவும் மர்மக்காய்ச்சலுக்கு சிறுமி பலி... மருத்துவமனையில் உறவினர்கள் முற்றுகைப் போராட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஈரோடு: அந்தியூர் தனியார் மருத்துவமனையில் பள்ளிச் சிறுமி மர்மக் காய்ச்சலால் உயிரிழந்ததால், அந்த மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அந்தியூரைச் சேர்ந்தவர் விஜயன். இவரது மகள் திவ்யதர்ஷினி மூன்றாம் வகுப்புப் படித்து வந்தார். அவருக்கு நான்கு நாட்களாக கடும் காய்ச்சல் இருந்ததால், அவரை அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மருத்துவமனையில் அதிக பணம் வாங்கிக் கொண்டு திவ்யதர்ஷினிக்கு மருத்துவம் பார்த்துள்ளனர். ஆனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிர் இழந்தார். இதனால், கடும் கோபமடைந்த விஜயனின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் பல இடங்களில் டெங்கு, ஜிகா வைரஸ் உள்ளிட்ட பல்வேறுவிதமான காய்ச்சல் பரவி வருகிறது. உயிர் பலியான பின்பே சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். ஆனால், காய்ச்சல் பரவுவதற்கு முன்பே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Divya dharshini who was studied in class 3 died in private hospital in Anthiyur due to heavy fever. Relatives protested in front of the hospital as they did not give proper treatment.
Please Wait while comments are loading...