திருப்பத்தூரில் தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் காவல் நிலையத்தில் சரண்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன்- வீடியோ

  திருப்பத்தூர்: திருப்பத்தூரில் தலைமை ஆசிரியரை மாணவன் கத்தியால் குத்தியதால் காயமடைந்த அவர் வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த மாணவன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

  வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளவர் பாபு (52). இவர் இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார்.

  School student attacks HM by knife in Vellore District

  அப்போது அவரது அறைக்கு ஆவேசமாக வந்த மாணவன் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டார். இதையடுத்து காது மற்றும் வயிற்று பகுதியில் காயமேற்பட்டு ரத்த வெள்ளத்தில் சுருண்ட பாபுவை ஊழியர்கள் மீட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

  இதுதொடர்பாக திருப்பத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் ஹரிஹரன் பிளஸ் 1 படித்து வருவது தெரியவந்தது.

  இவர் வேதியியல் தேர்வின் போது ஹரிஹரன் காப்பி அடித்த போது அவரை தலைமை ஆசிரியர் பாபு பிடித்துவிட்டார். இந்த வஞ்சத்தை மனதில் வைத்துக் கொண்டு பாபுவை மாணவன் குத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் காவல் நிலையத்தில் ஹரிஹரன் இன்று மாலை சரணடைந்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A student of Tiruppathur school, Vellore District attacks his School Headmaster using Knife. He admits in Vellore CMC Hospital for getting treatment on his severe injuries.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற