ஜாதி கட்சிகளால் நாட்டை ஆள முடியாது.. சீமான் செம காட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: தமிழ் நாட்டில் தமிழர் தான் ஆள வேண்டும். ஜாதி கட்சிகள் ஆள முடியாது என்று சீமான் கூறியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் சீமான் பேசியதாவது: தமிழகத்தில் ஜாதி கட்சிகள் சேர்ந்து நாட்டை ஆள முடியாது. மொத்த தமிழனும் சேர்ந்து ஒற்றை தமிழனுக்கு வாக்களித்து நாட்டை ஆள வேண்டும்.

Seeman attacks caste politics

வாழும் உரிமை எவருக்கும் உண்டு. ஆனால் ஆளும் உரிமை தமிழர் எமக்கே உண்டு. இது தான் எங்கள் முதன்மை தத்துவமாகும். தமிழ்மொழி 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னது என அமெரிக்க மொழியியல் ஆய்வு அறிஞர் அலெக்ஸ் கூறியுள்ளார். மேலும் உலகில் எல்லோரும் பேசிய மொழி தமிழ் என ஆய்வில் கூறுகிறார்.

மொழி ஞாயிறு தேவ நேயபாவாணர் தமிழ் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னது என கூறுகிறார். மதம் பரப்ப வந்த கால்டுவெல் போப் ஆதியில் காடுகளில் வாழ்ந்து பிறகு நகரங்களை நோக்கி நகர தொடங்கியபோது அவர்கள் பேசிய மொழிகளில் இருக்கிற எழுத்து வடிவமும் இன்று வரை தமிழில் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

அப்படிப்பட்ட ஒரு தமிழ் இனம் அடிமைப்பட்டு, அல்லல்பட்டு தன் இனப்பெருமை தெரியாது தாழ்ந்து போய் உள்ளது. நாட்டில் இன்னும் எத்தனையோ பேர் இரவு உணவின்றி இருக்கிறார்கள். ஊட்டச்சத்து குறைபாடு உள்ளோர் எத்தனையோ பேர் உள்ளனர். எத்தனையோ பேர் உணவின்றி இறக்கிறார்கள். அவர்களுக்கு உணவளிப்பதை விட்டு மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது என்று சட்டம் இயற்றுகிறார் மோடி.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது அதன் பின் மாடுகளை விற்க தடை. இப்படியே தொடர்ந்தால் விவசாயி எப்படி பிழைப்பான். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாட்டு இறைச்சி சாப்பிடாதவர்களுக்கு தண்டனை கொடுப்பேன். மக்கள் தனி மனித அபிமானங்கள், தனி மனித புகழ்ச்சியை விட்டு வர வேண்டும். இவ்வாறு சீமான் காட்டமாக பேசினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Naam Thamizhar leader Seeman has attacked caste politics in Tamil Nadu at a public meeting held in Ramanathapuram.
Please Wait while comments are loading...