For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மரக்கட்டைக்கு இருக்கும் மதிப்பு, இந்த மண்ணில் தமிழன் உயிருக்கு இல்லை... சீமான் ஆதங்கம்

Google Oneindia Tamil News

திருப்பூர்: திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக இவ்வளவு போராட்டங்கள் நடந்த பின்னரும், ஆந்திர அரசு தொடர்ந்து மௌனம் காப்பது மனிதநேயமற்ற செயல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று திருப்பூரில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

Seeman condemns Andhra government

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் சீமான் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மே 24-ல் தமிழர் இன எழுச்சி அரசியல் மாநாடு திருச்சி யில் நடைபெற உள்ளது.

நம் மண்ணில் நாம் தமிழர்களாக இல்லை. இங்கிலாந்து நாட்டின் ஒரு மாநிலம் போல்தான் தமிழ்நாடு உள்ளது. அப்படிதான் மொழி, பண்பாடு, கலாச்சாரம் என அனைத்தும் உள்ளது. நம்முடைய பாரம்பரியத்தை வேளாண்மை தொடங்கி, அனைத்திலும் மீட்டெ டுக்க வேண்டிய தேவை உள்ளது.

இலங்கையில் தமிழர்களை சிங்களர்கள் சுடுகிறார்கள்; கர்நாடகம், கேரளத்தில் அடிக்கி றார்கள்; ஆந்திராவில் சுட்டுக்கொல் கிறார்கள். இதை, அந்த மாநிலத்தின் நீதிமன்றம் உட்பட அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்கிறார்கள். தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர் பாக ஆந்திர அரசு வருத்தம் தெரிவிக்காமலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் கோபத்தை ஏற்படுத்துகிறது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன், சம்பந்தப் பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது ஆந்திர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகும், ஆந்திர அரசு மெளனம் காப்பது மனிதநேயமற்ற செயல். மரக்கட் டைக்கு இருக்கும் மதிப்பு, இந்த மண்ணில் தமிழன் உயிருக்கு இல்லை' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
The Naam tamilar katchi president Seeman has condemned Andhra government for not taking enough action on encounter issue, even after the vigorous protest in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X