பெங்களூரு கோர்ட் தீர்ப்பு எங்களை கட்டுப்படுத்தாது... செம்மலை எம்எல்ஏ விளக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பெங்களூரு கோர்ட் தீர்ப்பு எங்களை கட்டுப்படுத்தாது-செம்மலை எம்எல்ஏ-வீடியோ

  சென்னை : அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து பெங்களூரு நீதிமன்றம் அளித்த உத்தரவு தங்களைக் கட்டுப்படுத்தாது என்று எம்எல்ஏ செம்மலை கூறியுள்ளார்.

  அதிமுகவின் இரு அணிகள் இணைந்த பிறகு முதன்முறையாக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் சசிகலா, தினகரனை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வானகரத்தில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தவர்கள் வந்துள்ளனர்.

   Semmalai MLA says that Bengaluru court's order could not control them

  கூட்டத்தில் பங்கேற்க வந்த எம்எல்ஏ செம்மலை செய்தியாளர்களிடம் கூறியதாவது : அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் பெங்களூரு கோர்ட் தீர்ப்பு எங்களை கட்டுப்படுத்தாது. அதிமுக பதிவு செய்யப்பட்ட மாநில கட்சி என்பதால் எங்களை அந்தத் தீர்ப்பு கட்டுப்படுத்தாது என்றார்.

  அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பெங்களூரு அதிமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த புகழேந்தி பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கினார். இந்தத் தீர்ப்பின் நகல் இன்று காலையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  MLA Semmalai says that Bengaluru civil court's interim ban should not control them to conduct general body meeting.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற