சேலத்தில், போலிப் பத்திரத்தை காட்டி ரூ.1.20 கோடி மோசடி செய்த கில்லாடி தாத்தா, பாட்டி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம் : போலி ஆவணத்தை காட்டி வங்கியில் அடமானமாக வைத்து ஒரு கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்த வயது மூத்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம், அம்மாபேட்டையிலுள்ள கந்தசாமி வீதியை சேர்ந்தவர்கள் 67 வயது இராஜமாணிக்கம் மற்றும் 57 வயது சவிதா தம்பதி. இவர்களுக்கு கோவை மாநகர பகுதியிலுள்ள பூமார்க்கெட் பகுதியில், 4 ஆயிரத்து 840 சதுரஅடி பரப்பளவில் சொந்தமான இடம் ஒன்று இருந்துள்ளது. இந்த இடத்தை சேலத்தை சேர்ந்த அருண் என்பவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே விற்பனை செய்து விட்டனர்.

 Senior Citizen couple at Salem arrested for get loan with alleging documents

அருணுக்கு விற்பனை செய்த இடத்துக்கு போலி ஆவணம் தயாரித்துள்ளார்கள் இராஜமாணிக்கமும், சவிதாவும். ஏற்கனவே விற்கப்பட்ட நிலம் தங்களுடையது தான் என்று கூறி, அதனை, திருப்பூர், கரூர் வைஸ்யா வங்கியில் அடமானம் வைத்து, ரூ.1.20 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.

வங்கி ஆண்டு இறுதி தணிக்கையின் போது அடமான ஆவணங்களை சரிபார்த்த வங்கி அதிகாரிகள் நிலத்திற்கான ஆவணங்கள் போலியாக தயாரிக்கப் பட்டுள்ளது என்பதை கண்டு பிடித்தனர். இதையடுத்து, இதுகுறித்து அந்த வங்கியின் மேலாளர் முத்துக்குமார், கோவை மாநகர குற்றப்பிரிவு உதவி ஆணையாளர் ஆசைதம்பியிடம் புகார் அளித்தார்.

மேலாளர் அளித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், போலி ஆவணம் தயாரித்தல், மோசடி, கூட்டு சதி, ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளில் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து இராஜமாணிக்கம் மற்றும் சவிதாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Salem Senior Citizen couple arrested for getting loan from banks with forgery documents.
Please Wait while comments are loading...