கரூரில் சங்கிலியால் தன்னைத் தானே கட்டிக்கொண்டு முதியவர் போராட்டம் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த முதியவர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்கிலியால் தன்னைத் தானே கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் ரஹமதுல்லா. இவர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் தன்னைத் தானே சங்கிலியால் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தினார். இதைக் கண்ட போலீசார் சங்கிலியை அவிழ்த்து அவரை மீட்டனர். அப்போது அவர் போலீசாரிடம், மருமகனும் அவரது உறவினர்களும் தன்னைத் தாக்கியதாகவும் அதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்ததாகவும் கூறினார்.

 A senior citizen tied himself with chain in front of karur disrict collector office

ஆனால், போலீசார் புகார் அளித்து பல நாட்களாகியும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், சங்கிலியால் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தியதாகக் கூறினார். இதனையடுத்து, புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A senior citizen tied himself with chain in front of karur disrict collector office and police rescued him.
Please Wait while comments are loading...