திராவிட மாடலா? கேட்கவே ஒரு மாதிரி இருக்குல்ல.. அது தமிழ் வார்த்தையா? தமிழிசை செளந்தரராஜன் கிண்டல்
நெல்லை: "திராவிட மாடலா.. அது என்ன தமிழ் வார்த்தையா.. அதற்கு மாற்றாக நல்ல தமிழ் பெயரை வையுங்கள்" என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் கூறினார்.
மேலும், தமிழக ஆளுநரின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, இன்னொரு ஆளுநர் குறித்து நான் மதிப்பீடு செய்வது சரியாக இருக்காது என்றும் அவர் பதிலளித்தார்.
மகாகவி பாரதியாரின் 141-வது பிறந்தநாள் நிகழ்ச்சி தூத்துக்குடியில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள வருகை தந்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன், நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் இன்று தங்கினார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

"ஆக்கப்பூர்வமான ஆளுநர் நான்"
புதுச்சேரி ஆளுநராக பதவியேற்றது முதல் இங்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில்தான் ஈடுபட்டு வருகிறேன். ஒரு துணைநிலை ஆளுநர் என்ற முறையில் புதுச்சேரி அரசுக்கு திணைாக செயல்பட்டு வருகிறேன். அரசுடன் எந்தக் காலத்திலும் பிணக்குடன் செயல்பட்டது கிடையாது. இணக்கமாகவே செயல்பட்டு வருகிறோம். குறிப்பாக, கொரோனா காலத்தில் 3 மாதங்கள் புதுச்சேரில் ஆளுநர் ஆட்சிதான் இருந்தது. அப்போது கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுத்ததை யாராலும் மறுக்க முடியாது.

தமிழக ஆளுநரின் செயல்பாடு..
தமிழக ஆளுநரின் செயல்பாடு குறித்து கேட்கிறீர்கள். இன்னொரு ஆளுநரின் செயல்பாடு குறித்து நான் எப்படி கருத்து தெரிவிக்க முடியும்? அப்படி மற்ற ஆளுநர்கள் குறித்து பதவியில் இருக்கும் ஒரு ஆளுநர் மதிப்பீடு அறிக்கை தருவது சரியாக இருக்காது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு அம்மாநில ஆளுநர் ஆர்.என். ரவி ஒருவிதமான முயற்சிகளை செய்திருக்கலாம். நான் புதுவையில் வேறு மாதிரியான முயற்சிகளை செய்திருக்கலாம். அதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

"அதற்குதானே அரசாங்கம் இருக்கிறது"
புயலை வெற்றிகரமாக சமாளித்துவிட்டோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறுகிறார். புயலை வெற்றிகரமாக ஒரு அரசு சமாளித்துவிட்டது என்றால் அதில் அதிகாரிகள் மற்றும் மக்களின் பங்களிப்பும் இருக்கிறது. அதை யாரும் மறந்துவிடக் கூடாது. புயல் வருகிறது என்றால் அதில் இருந்து மக்களை காப்பாற்றுவதுதானே ஒரு அரசாங்கத்தின் கடமை? அதற்காகதானே அரசாங்கம் என்ற ஒன்று இருக்கிறது.

"அது என்ன திராவிட மாடல்?"
தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி திமுக தொண்டர்கள் வரை "திராவிட மாடல்", "திராவிட மாடல்" எனக் கூறுகின்றனர். அதை கேட்கவே ஒருமாதிரியாக இருக்கிறது. திராவிட மாடல் என்பது தமிழ் கிடையாது. ஆகவே, முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் மகன் மு.க. ஸ்டாலின், அதற்கு மாற்றாக ஒரு நல்ல தமிழ்ப் பெயரை கண்டுபிடிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். இவ்வாறு தமிழிசை செளந்தர்ராஜன் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications