For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்துக்கு தண்ணீர் தருவோம் என்பதை பிரதிபலிக்க கன்னடர்கள் இதை செய்ய வேண்டும்: சிம்பு வேண்டுகோள்

மவுன போராட்டம் செய்வதில் எந்த விதமான உடன்பாடும் இல்லாததால் திரையுலகினர் நடத்திய போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று நடிகர் சிம்பு பேட்டி அளித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கன்னடர்கள் இதை செய்ய வேண்டும்: சிம்பு வேண்டுகோள்

    சென்னை: தமிழகத்திற்கு தண்ணீர் தருவோம் என்பதை பிரதிபலிக்கும் வகையில் ஏப்ரல் 11 ம் தேதி மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் கர்நாடக மக்கள் ஒரு டம்ளர் தண்ணீரை தமிழனுக்கு கொடுத்து வீடியோவாக வெளியிட வேண்டும் என்று நடிகர் சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் ஆலை ஆகிய பிரச்சனைகளுக்காக தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் போராடி உள்ளனர். காலையில் தொடங்கிய இந்த போராட்டத்தில் பெருவாரியான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். 3 மணி நேரம் இந்த போராட்டம் நீடித்தது.

    Simbu explains why he didnt participate in Tamil Cinema celebrities Protest on Cauvery, Sterlitte issue

    ஆனால் இந்த போராட்டத்தில் நடிகர் சிம்பு மற்றும் அவரது தந்தை டி. ராஜேந்தர் கலந்து கொள்ளவில்லை. இது பெரிய அளவில் சர்ச்சைகளை உருவாக்கியது.

    தற்போது இதற்கு சிம்பு விளக்கம் அளித்துள்ளார். அதில் ''மவுன போராட்டம் செய்வதில் எந்த விதமான உடன்பாடும் இல்லாததால் திரையுலகினர் நடத்திய போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று நடிகர் சிம்பு பேட்டி அளித்துள்ளார். சினிமா பிரச்சனைகளுக்கே தீர்வு காணவில்லை அதற்குள் நடிகர்கள் காவிரி பிரச்சனைக்கு களமிறங்கிவிட்டார்கள்'' என்று கோபமாக பேசியுள்ளார்.

    மேலும் ''காவிரி போராட்டத்திற்கு நாம் நேரடியாக மக்களிடம் சென்று தண்ணீர் கேட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும். நாம் கேட்டால் கர்நாடக மக்கள் தண்ணீர் கொடுப்பார்கள். இதை வைத்து அரசியல் செய்யும் கட்சிகள் யாரும் நமக்கு தண்ணீர் வாங்கி கொடுக்க மாட்டார்கள்'' என்றுள்ளார்.

    மேலும் ''காவிரிக்காக ஐபிஎல் போட்டியை தடை செய்ய கூடாது. இப்போதுதான் சென்னை அணி மீண்டும் வந்துள்ளது. ஆனால் சென்னை அணி வீரர்கள் நமக்கு ஆதரவு அளிக்கலாம். டோணி கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடலாம். இல்லையென்றால் தமிழர்களை மைதானத்திற்குள் அனுமதிக்க வேண்டும் . மீதி விஷயத்தை தமிழர்கள் பார்த்துக் கொள்வார்கள்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    தண்ணீர் இங்கு ஆறாய் ஓடியது.... அதை சேமிக்க இத்தனை வருடமாய் நாம் என்ன செய்தோம். தமிழகத்திற்கு தண்ணீர் தருவோம் என்பதை பிரதிபலிக்கும் வகையில் ஏப்ரல் 11 ம் தேதி மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் கர்நாடக மக்கள் ஒரு டம்ளர் தண்ணீரை தமிழனுக்கு கொடுத்து வீடியோவாக வெளியிட வேண்டும் என்றும் சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    English summary
    Simbu explains why he didn't participate in Tamil Cinema celebrities Protest on Cauvery, Sterlitte issue. He says that he doesn't believe in Silent protest.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X