டிடிவியுடன் மோதல்.. அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட வழக்கறிஞர் சிவசங்கரி.. திவாகரன் பக்கம் தாவினார்?!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட வழக்கறிஞர் சிவசங்கரி திவாகரன் கட்சியில் சேர்ந்து இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட வழக்கறிஞர் சிவசங்கரி திவாகரன் கட்சியில் சேர்ந்து இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

டிடிவி தினகரனின் கட்சியில் மிக முக்கிய உறுப்பினராக இருந்தவர் வழக்கறிஞர் சிவசங்கரி. முக்கியமான தொலைக்காட்சி விவாதங்களில் எல்லாம் இவர்தான் அமமுக சார்பாக கலந்து கொள்வார். அமமுக கட்சியில் இவருக்கு முக்கிய செல்வாக்கு இருந்தது.

Sivashankari may join in Diwakaran party after her clash with TTV Dinakaran

திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் கட்சியை சேர்ந்த ஆட்கள் கலந்து கொள்ளும் விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கூடாது என்று தினகரன் ஏற்கனவே தனது கட்சியினருக்கு அறிவுறுத்தி இருந்தார். எந்த விதமான விவாத நிகழ்ச்சியாக இருந்தாலும், திவாகரனின் ஆட்கள் நிகழ்ச்சிக்கு வந்தால், அதில் கலந்து கொள்ள கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

[ஓட்டுக்கு ரூ. 6000 கொடுத்தும் ஆர்கே நகரில் எடப்பாடியால் ஜெயிக்க முடியலியே- டிடிவி தினகரன் கிண்டல்]

ஆனால் இதை மீறி கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த விவாத நிகழ்ச்சி ஒன்றில் வழக்கறிஞர் சிவசங்கரி கலந்து கொண்டார். அதில் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகத்தை சேர்ந்த தேனி கர்ணன் கலந்து கொண்டார். இந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் வழக்கறிஞர் சிவசங்கரி பிரச்சனையில் சிக்கினார்.

இதனால் அமமுக சார்பில் வழக்கறிஞர் சிவசங்கரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இவர் அமமுக கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் மற்றும் காஞ்சி மாவட்ட பாராளுமன்ற தொகுதிப் பொறுப்பாளராக இருந்தார்.

இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட வழக்கறிஞர் சிவசங்கரி திவாகரன் கட்சியில் சேர்ந்து இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் கட்சியில் அவர் சேர்ந்துவிட்டார் என்று தகவல்கள் வருகிறது.

இது தினகரன் தரப்பிற்கு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. இன்று சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய டிடிவி தினகரன் இதுகுறித்து விவாதித்ததாகவும் கூறப்படுகிறது. திவாகரன் தரப்பில் இருந்து ஆட்களை கட்சிக்குள் இழுக்க முயற்சிக்கும் டிடிவிக்கு இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+