சில நடிகர்கள் நடிப்பது சினிமாவுக்கே நல்லதில்லை.. பிரகாஷ் ராஜ் கருத்துக்கு எஸ்வி சேகர் பொளேர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சில நடிகர்கள் நடிப்பது சினிமாவுக்கே நல்லதில்லை- வீடியோ

சென்னை: சில நடிகர்கள் நடிப்பது சினிமாவுக்கே நல்லதில்லை என நடிகர் பிரகாஷ் ராஜிக்கு எஸ்வி சேகர் பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் அவ்வப்போது சமூக பிரச்சனைகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை வெளியிட்டு வருகிறார். பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை சம்பவம் தொடர்பாக கடும் கண்டம் தெரிவித்திருந்த அவர், பிரதமர் நரேந்திர மோடி தன்னை விட சிறந்த நடிகர் என்றும் சாடியிருந்தார்.

Some actors acting is not good for cinema said SV Shekar on Prakash raj

மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, உபி சுற்றுலாப் பட்டியலில் தாஜ்மஹால் சேர்க்கப்படாதது குறித்தும் அவர் விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது நாட்டிற்கு பேரழிவு என அவர் கூறினார். நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வரவுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜின் இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜிக்கு பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்வி சேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரகாஷ் ராஜின் செய்தி பதிவை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சில நடிகர்கள் நடிப்பது சினிமாவுக்கே நல்லதில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Some actors actting is not good for cinema said SV Shekar on Prakash raj. Actor Prakash raj said Actors comes in politics is not good.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற