ஓட்டுநர் மணிகண்டன் உடல் இருக்கும் மருத்துவமனையில் பதற்றம்.. அதிரடி படை குவிப்பு
ஓட்டுநர் மணிகண்டன் உடல் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் பதற்றம் நிலவி வருகிறது.
சென்னை: ஓட்டுநர் மணிகண்டன் உடல் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் பதற்றம் நிலவி வருகிறது. புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகளுக்கும் சக ஓட்டுநர்களுக்கும் இடையில் சலசலப்பு உருவாகி இருக்கிறது.
சென்னை திருவான்மியூரில் கார் ஓட்டுநராக இருக்கிறார் மணிகண்டன். இவரது சொந்த ஊர் நெல்லை. இவர் காரில் சீட் பெல்ட் போடவில்லை என்று வேளச்சேரி காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் தாக்கி இருக்கிறார்.

இவருடன் சேர்ந்து இன்னும் மூன்று போலீஸ் இவரை தாக்கி உள்ளனர். சாலையில் பலர் பார்க்கும்படி இவர் தாக்கப்பட்டு இருக்கிறார். இதனால் மனமுடைந்த மணிகண்டன் தீக்குளித்தார்.
இதனால் மணிகண்டன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இவர் உடலில் 59 சதவிகித தீக்காயங்கள் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவமனை தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் இந்த தீக்குளிப்பு சம்பவத்தில் குற்றச்சாட்டப்பட்ட உதவி ஆய்வாளர் விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. விஜயகுமார் உதவி ஆய்வாளர் பதவியில் இருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் இன்று மதியம் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

அதே சமயம் அங்கு வந்த புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மணிகண்டனின் பெற்றோரை மருத்துவமனையில் இருந்து அழைத்து செல்ல முயற்சி செய்தனர். இதற்கு சரியான காரணமா தெரிவிக்கப்படவில்லை. இதற்கு மணிகண்டனின் நபர்கள், சக ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. அதே சமயத்தில் மருத்துவமனைக்கு வெளியே ஆம் ஆத்மி போராட்டம் நடத்தி வருகிறது. போலீஸ் விஜயகுமார் மீது இன்னும் நடவடிககை வேண்டும் என்று சொல்லி வருகின்றனர்.
இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து அங்கு சிறப்பு அதிரடி படை குவிக்கப்பட்டு இருக்கிறது.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications