For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நல்ல மழை வேண்டி பிரத்தியங்கரா தேவி கோவிலில் சிறப்பு பைரவ யாகம்...

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் வறட்சி பகுதிகளில் நல்லமழை பொழிய வேண்டி சிறப்பு பைரவ யாகம் நடந்தது.

தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகேயுள்ள அய்யனடைப்பு சித்தர்நகரில் தமிழகத்திலேயே மிக உயரமான 11அடி உயரத்தில் ஒரே கல்லால் ஆன பிரத்தியங்கிராதேவி - காலபைரவர் சுவாமிகளின் சிலைகள் நிறுவப்பட்டு நாள்தோறும் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

ரவ அஷ்டமியை முன்னிட்டு, தமிழகத்தில் வறட்சி மாவட்டங்களில் நல்லமழை பொழிந்து வளம் பெறவேண்டியும், உலக மக்கள் அனைவரும் நோய்கள், உடல்பிணிகள் நீங்கி நலமாக வாழவேண்டியும் பிரத்தியங்கிராதேவி, காலபைரவருக்கு பைரவ யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து திருமஞ்சனம், தயிர், மஞ்சள், சந்தனம், இளநீர், பால், குங்குமம் உள்ளிட்ட 16வகையான அபிஷேகத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

Special yagna for rain

சிறப்பு யாகம் மற்றும் வழிபாடுகளானது பிரத்தியங்கிராதேவி காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் முன்னிலையில் நடந்தது. யாகத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. பைரவ யாகத்திற்கான ஏற்பாடுகளை பிரத்தியங்கிராதேவி காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் ஆலய நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.

English summary
A special yagna was held in Tuticorin for rain in Prathyankara devi temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X