அடிமைக் கூட்டம்.. கொந்தளிக்கும் ஸ்டாலின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் கிளைக்கட்சி போலவே அதிமுக செயல்பட்டு வருவதை தமிழக மக்கள் மட்டுமல்ல இந்திய மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிச்சாமி, அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அதில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

Stalin Accuses ADMK and the govt for having hidden alliance with bjp

பாஜகவின் அடிமைக்கூட்டத்தை சகல இந்திய மக்களும் இனம்கண்டுகொண்டு விட்டதாக கூறியுள்ள ஸ்டாலின், பாஜகவின் கிளைக்கட்சியாக அதிமுக செயல்படுவது அனைவருக்கும் தெரியும் எனவும் கூறியுள்ளார்.

சட்டமன்றத்தில் போதிய பெரும்பான்மை இல்லாத மைனாரிட்டி ஆட்சி தொடர்வதற்கும், ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கும் பாஜக அதிமுகவுக்கு உதவுவது முதற்கொண்டு அனைத்தையும் மக்கள் அறிவார்கள் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழக திட்டங்கள் தொடர்பாக பிரதமரை ஓபிஎஸ் சந்தித்தாக கூறப்பட்ட நிலையில், அவ்வாறு எந்த திட்டத்தை அவர் முன்வைக்கவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பெறப்பட்ட தகவல்கள் அம்பலப்படுத்துவதாகவும் ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஈபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் தனிப்பட்ட முறையில் அடைய லாபத்திற்காக அதிமுகவை மறைமுகமாக பாஜகவிடம் அடகு வைத்து விட்டதாகவும், இவை அனைத்தையும் மக்கள் கவனித்துக்கொண்டு தான் இருப்பதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Stalin Accuses ADMK and the govt for having hidden alliance with bjp. And he added that soon people of tamilnadu will tear fake mask of admk

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற