For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பள்ளி மாணவர்களை குறிவைக்கும் திமுக.... கருணாநிதி, ஸ்டாலின் படங்களுடன் டிக்ஸனரி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: இளைய தலைமுறையினரை குறிவைக்கும் திமுக, பள்ளி மாணவர்களை கவர பல திட்டங்களை வகுத்துள்ளது. இதன் முதற்கட்டமாகவே, தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கருணாநிதியும், ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதே சூட்டோடு சூட்டாக அவர்களுக்கு ஆங்கில டிக்ஸ்னரியை வழங்கி அட்ராக்ட் செய்துள்ளனர்.

மாணவர்களை கவர இலவச மடிக்கணினி வழங்கியது அதிமுக அரசு. இதன் மூலம் கடந்த 5 ஆண்டுகளாக இலவச லேப்டாப் உள்ளிட்ட அரசின் பல சலுகைகளை அனுபவித்தவர்கள் இப்போது அதிமுகவிற்கு வாக்காளிப்பார்கள் என்பது ஆளும் அதிமுகவின் எண்ணம்.

Stalin birthday: DMK caders distribute dictionary for students

அதிமுகவின் பாணியை கையிலெடுத்துள்ள திமுக மாணவர்களை அட்ராக்ட் செய்யும் பல திட்டங்களை தேர்தல் அறிக்கையில் வெளியிடும் என்று தெரிகிறது.

முதற்கட்டமாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை வாழ்த்தி திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் 45 ஆயிரம் மாணவர்களுக்கு ஆங்கிலம் - தமிழ் டிக்ஸனரிகளை விநியோகித்துள்ளனர். மதுரை கிழக்குத் தொகுதியிலுள்ள 33 அரசு, தனியார் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை பயிலும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் ஒரே நாளில் விநியோகம் செய்யப்பட்டது.

மு.க.ஸ்டாலின் புகழை மாணவர்கள் மூலம் பெற்றோர் வரை கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும், திமுகவினர் கூறியுள்ளனர்.

டிக்ஸனரியிலுள்ள அட்டைப் படத்தை நீக்கிவிட்டு ‘வருங்கால தமிழகத்தின் தளபதி அவர்களின் 64ம் ஆண்டு பிறந்த நாள் பரிசு' என்ற வாசகத்துடன் திமுக தலைவர் மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின், ஆகியோரின் படங்களுடன் உதயசூரியன் சின்னத்துடன் அச்சிடப்பட்டுள்ளன.

இந்த அகராதிகளின் மதிப்பு ரூ.27 லட்சம். இந்நிலையில் திமுகவினர் டிக்ஸனரிகளை வழங்கிய தகவல் அறிந்து பல பள்ளிகளின் நிர்வாகம் தலைமை ஆசிரியர்கள், பொறுப்பாசிரியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளது.

English summary
DMK caders distributes dictionary for School students for stalin birthday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X