"தங்கவேலு.. அது 2 கோடி இல்லை”.. தீர்மானம் வாசிக்கும்போது நிர்வாகி செய்த தவறை திருத்திய ஸ்டாலின்!
மதுரை: இன்று மதுரையில் நடைபெற்று வரும் திமுக பொதுக்குழுவில் தீர்மானம் வாசிக்கும்போது திமுக நிர்வாகி தவறுதலாக வாசித்த நிலையில், உடனடியாக அதனைச் சுட்டிக்காட்டி திருத்தினார் திமுக தலைவர் ஸ்டாலின்.
மதுரையில் நடைபெற்று வரும் திமுக பொதுக்குழு கூட்டம் அரசியல் ரீதியாக பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தென்மண்டலத்தில் திமுகவின் செல்வாக்கை உறுதியாக நிலைநாட்டும் விதமாக 47 ஆண்டுகளுக்குப் பிறகு திமுகவின் பொதுக்குழு மதுரையில் நடத்தப்பட்டுள்ளது. இந்தப் பொதுக்குழுவில் 27 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மு.க.ஸ்டாலினை வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறச் செய்து மீண்டும் முதலமைச்சராக அமர்த்துவது. கருணாநிதி பிறந்த நாளாக ஜூன் 3அம் தேதியை செம்மொழி தினமாக கொண்டாட ஏற்பாடு, நாட்டிலேயே முன்னோடியாக மகளிர் வாழ்வை மேம்படுத்தி வரும் முதலமைச்சருக்கு நன்றி. திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக திமுக சார்பில் ஏற்கனவே 23 அணிகள் உள்ள நிலையில், புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு அணிகளின் எண்ணிக்கை 25ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் அணி மற்றும் கல்வியாளர்கள் அணி என இரண்டு அணிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தப் பொதுக்குழுவில் தீர்மானங்களை திமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து வாசித்தனர். அந்தவகையில், தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை வாசித்த திமுக நிர்வாகி தங்கவேல், மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசின் கல்வி நிதி ரூபாய் 2,152 கோடி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பா.ஜ.க அரசின் நிலைப்பாட்டை, இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கும் தமிழ்நாட்டில் ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் பிரகடனப்படுத்தி எச்சரிக்கை செய்துள்ளார் என வாசித்தார். அப்போது, 2,152 கோடி என்பதை வாசிக்கும்போது 2 கோடியே என வாசித்து திணறினார்.
முதல்வர் ஸ்டாலின் இதனை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். தனது கையில் இருந்த தீர்மான காகிதத்தை பார்த்துக் கொண்டிருந்த ஸ்டாலின், மைக்கை எடுத்து, 2 கோடி இல்லை, ரூபாய் 2,152 கோடி எனக் கூறினார். இதையடுத்து, தீர்மானத்தை வாசித்த நிர்வாகி திருத்திக் கொண்டார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி?











Click it and Unblock the Notifications