எல்லா ரேஸிலும் மு.க. அழகிரியை வென்ற ஸ்டாலின்!
Recommended Video

சென்னை: அழகிரியின் சலசலப்புக்கெல்லாம் அஞ்சாமல் ரேஸில் முந்தி திமுக தலைவர் என்ற டைட்டிலை ஸ்டாலின் வென்றுள்ளது தொண்டர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி உயிருடன் இருந்தபோதே அவருக்கு பிறகு தான்தான் வாரிசு என்று மிதப்பில் இருந்தார் அழகிரி. ஆனால் கட்சிக்கு உண்மையாக உழைத்தவர் ஸ்டாலின் என்ற முறையில் அவருக்கு அடுத்தடுத்த பொறுப்புகள் வந்தன. மேலும் எல்லா ரேஸ்களிலும் அழகிரியை ஸ்டாலின் முந்தினார்.
இந்நிலையில் ஒரு கட்டத்தில் அழகிரி தனது ஆதரவாளர்களுக்கு கட்சியில் முக்கிய பதவிகள் வழங்கப்படவில்லை என்ற பிரச்சினையை எழுப்பினார். இதையடுத்து கட்சியின் விதிகளை மீறி செயல்பட்டதாக அழகிரியை கருணாநிதி திமுகவிலிருந்து கடந்த 2014-ஆம் ஆண்டு நீக்கினார்.

கேட்கவில்லை
இதையடுத்து அழகிரியிடம் தங்கை கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்டோர் சமாதானம் பேசினர். எனினும் அவர் கேட்கவில்லை. அவ்வப்போது கோபாலபுரத்துக்கு வந்து தலையை காட்டினார் என்றாலும் திமுகவில் அழகிரியை மீண்டும் சேர்த்து கொள்ளவில்லை. இதையடுத்து சட்டமன்ற தேர்தலின் போது திமுகவுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்திருந்தார்.

திமுக தலைவர்
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். இதையடுத்து அவசர அவசரமாக பொதுக் குழு கூடயிருந்தது. அதற்கு முதல் நாள் கருணாநிதியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்ற அழகிரி கருணாநிதியின் உடன்பிறப்புகள் தன் பக்கம் இருப்பதாக தெரிவித்தார்.

பின்விளைவுகள்
வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி கருணாநிதியின் சமாதிக்கு பேரணியாக செல்கிறார் அழகிரி. அப்போது தன்னுடன் 75 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் தொண்டர்கள் வருவர் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து நேற்றைய தினம் அவர் அளித்த பேட்டியில் திமுகவில் தான் சேர்வதை சிலர் தடுக்கின்றனர் என்றும் என்னை சேர்க்காவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று வெளிப்படையாகவே மிரட்டினார் அழகிரி.

திமுக தலைவர்
இந்த நிலையில் அழகிரியின் சலசலப்புகளுக்கு அஞ்சாமல் உடன்பிறப்புகளின் ஆதரவோடு ஸ்டாலின் போட்டியின்றி தலைவராக அறிவிக்கப்படுகிறார். இது முழுக்க முழுக்க திமுகவில் அழகிரி நீக்கப்பட்டதாலேயே நடந்துள்ளதாக தொண்டர்கள் கருதுகின்றனர். அவர் திமுகவில் நீடித்திருந்தாலோ அல்லது மீண்டும் சேர்க்கப்பட்டிருந்தாலோ கருணாநிதியின் மறைவுக்கு பிறகு நிச்சயம் பெரும் பிரச்சினையை கிளப்பியிருப்பார் என்று கூறப்படுகிறது.
-
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications