பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு: ராஜேந்திர பாலாஜி உறுதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவகாசி: ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவு அளிக்கும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

பட்டாசு உற்பத்திக்கு ஜிஎஸ்டியில் 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனை 15 சதவீதமாகு குறைக்க வலியுறுத்தி வரும் ஜூன் 30ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

state government will support to Sivakasi Crackers manufacturers strike

இந்தப் போராட்டத்தில் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 811 பட்டாசு உற்பத்தி ஆலைகள் பங்கேற்க உள்ளதாக தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பட்டாசு உற்பத்தியாளர்கள் நடத்தும் வேலை நிறுத்தத்துக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்கும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சிவகாசியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜி.எஸ்.டி. வரி ஜூலை 1-ம் தேதி அமலானாலும் படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் பால் உற்பத்தியில் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். பால் கொள்முதல் விலை, கால்நடை தீவன மானியம் உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
state government will support to Sivakasi Crackers manufacturers started indefinite strike against GST, says minister rajendra balaji
Please Wait while comments are loading...