சென்னை போலீஸ் ஆபரேஷனில் பகீர்.. ரவுடிகளாக பிடிபட்ட வக்கீல்கள், மாணவர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னையில் துப்பாக்கி முனையில் 69 ரவுடிகள் கைது- வீடியோ

  சென்னை: ரவுடிகள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மாணவர்களும் வக்கீல்களும் பங்கேற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  சென்னை பூந்தமல்லியை அடுத்த மலையம்பாக்கத்தில் பினு என்ற ரவுடிக்கு சக ரவுடிகள் பிறந்தநாள் கொண்டாடினர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் ரவுடிகளை சுற்றி வளைத்தனர்.

  போலீசாரை கண்டதும் சில ரவுடிகள் தப்பியோடிவிட்டனர். எஞ்சியிருந்த ரவுடிகளை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

  பயங்கரை ஆயுதங்கள் பறிமுதல்

  பயங்கரை ஆயுதங்கள் பறிமுதல்

  இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 76 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  சதித்திட்டம் தீட்டப்பட்டதா

  சதித்திட்டம் தீட்டப்பட்டதா

  அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது சதித்திட்டம் ஏதாவது தீட்டப்பட்டதா என்பது குறித்தும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மாணவர்கள், வக்கீல்கள்

  மாணவர்கள், வக்கீல்கள்

  இந்நிலையில் கைது செய்யப்பட்ட ரவுடிகள் கூட்டத்தில் வக்கீல்களும் கல்லூரி மாணவர்களும் இருந்தது தெரியவந்துள்ளது. ரவுடிகள் கூட்டத்தில் மாணவர்கள் மற்றும் வக்கீல்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  பகீர் தகவல்களால் அதிர்ச்சி

  பகீர் தகவல்களால் அதிர்ச்சி

  இதுதொடர்பாக விசாரித்து வரும் போலீசார் ரவுடிகளுடன் மாணவர்களுக்கு தொடர்பு ஏற்பட்டது எப்படி என விசாரித்து வருகின்றனர். ரவுடிகளிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் பல பகீர் தகவல்கள் வெளியாவது காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rowdies has been arrested in Chennai poonamalle in the birthdau function. Students and lawyers also are there in the rowdys gang.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற