போலி பண்பாட்டு சட்டங்களுக்குள் அடங்காத படம் லட்சுமி: சு.ப.வீரபாண்டியன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
லட்சுமி நல்லவளா? கெட்டவளா?- வீடியோ

சென்னை: போலி பண்பாட்டு சட்டங்களுக்குள் அடங்காத படம் லட்சுமி என்று சு.ப..வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது லட்சுமி என்ற குறும்படம். இயக்குநர் கவுதம் மேனனின் யூடியூப் சேனல்களில் ஒன்றான என்டெர்டெயின்மென்டில் வெளியிடப்பட்டதுதான் லட்சுமி குறும்படம்.

கடந்த ஒரு வாரமாக சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது லட்சுமி குறும்படம். பலர் திட்டியும், சிலர் பாராட்டியும் வருகிறார்கள்.

கள்ளக்காதல் இல்லை

கள்ளக்காதல் இல்லை

கள்ளக்காதல்தான் கதையின் மையக்கரு. ஆனால் அதை கள்ளக்காதல் என்று பார்வையாளர்கள் நினைக்காத அளவுக்கு அதை நியாயம் கற்பிக்கும் காட்சிகளை இயக்குநர் சர்ஜன் செய்திருந்தார்.

இதுதான் கதை

இதுதான் கதை

அன்றாடம் ஒரே மாதிரி வேலை பார்த்து சலித்துப்போகும் பெண் ஒருவர், வடிகால் தேடி வேறு ஆடவன் வீட்டிற்கு சென்று அன்றே அவனிடம் தன்னை பறி கொடுப்பதே கதை.

சுப.வீ கருத்து

இதனிடையே இந்த படம் பற்றி, திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் டிவிட்டரில் கருத்து கூறியுள்ளார். இதுவரை வெளிப்படையாக எந்த அரசியல் பிரபலமும் இந்த படம் பற்றி கருத்து கூறாத நிலையில் சுப.வீரபாண்டியன் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

செயற்கை ஒழுக்க விதி

செயற்கை ஒழுக்க விதி

சுப.வீரபாண்டியன் கூறியுள்ள கருத்து இதுதான்: லட்சுமி குறும்படம் ஒரு புரட்சிப் படமோ, பெண் விடுதலை பேசும் படமோ இல்லை. மனித மனத்தின் இயல்பு பற்றிய உண்மை பேசும் படம். செயற்கையான ஒழுக்க விதிகள், போலிப் பண்பாட்டுச் சட்டங்களுக்குள் அடங்காத படம். விவாதங்களைத் தவிர்க்க முடியாத படமும் கூட!

இவ்வாறு சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Suba Veerapandian, says Lakshmi short film is above the fake culture.
Please Wait while comments are loading...