ஆர்கே நகரில் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தது ஏன்?...சு.சுவாமியின் ராமாயண கதை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே. நகரில் மற்ற வேட்பாளர்களை விட்டு விட்டு பாவம் செய்த டிடிவி தினகரனை தேர்வு செய்தது ஏன்? என்று அந்த தொகுதி மக்களின் கேள்விக்கு சுப்பிரமணியன் சுவாமி பதிலளித்துள்ளார்.

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், தினகரன் அணி ஆகியன போட்டியிட்டது. இந்த தேர்தலில் டிடிவி தினகரனுக்குகே வாக்களியுங்கள் என்று பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டரில் பிரசாரம் செய்தார்.

Subramanian Swamy tweets about RK Nagar winner TTV Dinakaran

சொந்த கட்சி வேட்பாளரை விட்டு விட்டு சசிகலா குடும்பத்துக்கு மக்களே எதிராக இருக்கும் நிலையில் அந்த குடும்பத்தை சேர்ந்த தினகரனுக்கு பிரசாரம் செய்வதா என்று பாஜக மூத்த நிர்வாகிகள் கொதிப்படைந்தனர்.

மேலும் கடந்த 21-ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெற்று முடிந்தபோதும் கூட தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பில் டிடிவி தினகரன்தான் அமோக வெற்றி பெறுவார் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்ததாக கூறிய சுவாமி எந்த நிறுவனத்தின் கருத்து கணிப்பு என்பதை சொல்ல வில்லை.

இந்நிலையில் பாஜக வேட்பாளர் உள்பட மற்ற வேட்பாளர்களை விட்டுவிட்டு பாவம் செய்த டிடிவி தினகரனுக்கு ஆதரவாக ஏன் பிரசாரம் செய்தீர்கள் என்று ஆர்கே நகர் மக்கள் சுவாமியிடம் கேட்கின்றனராம்.

அது குறித்து அவர் டுவிட்டரில் பதிலளிக்கையில் பாவம் செய்த டிடிவியை ஏன் தேர்வு செய்தீர்கள் என்று ஆர்கே நகர் வாக்காளர்கள் என்னிடம் கேள்வி எழுப்பினர். நான் அவர்களிடம், பாலியை விட்டுவிட்டு ராமர் ஏன் சுக்ரீவனை தேர்வு செய்தார் என்ற கதையை படியுங்கள் உங்களுக்கே அர்த்தம் புரியும் என்றேன் என்று பதிவு செய்துள்ளார்.

ராவணனை அழிக்க ராமர் சுக்ரீவனை தேர்வு செய்தார். அதுபோல் இந்த சுவாமியும் மற்ற கட்சிகளை அழிக்க டிடிவி தினகரனை தேர்வு செய்ததாக சப்பைகட்டு கட்டியுள்ளார்.

பாஜகவையும் அழிக்கவே டிடிவியை தேர்வு செய்தீர்களா சுவாமி.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Subramaniyan swamy says "Many voters of RK Nagar asked me why I preferred “sinner” TTV over others. I said: Read why Lord Rama preferred Sugriva over Bali".

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X