ரஜினிகாந்தை மிக கேவலமாக ஒருமையில் திட்டிய பொர்க்கி புகழ் சு.சுவாமி- அநாகரீகத்தின் உச்சம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியல் அநாகரீகத்தின் உச்சமாக நடிகர் ரஜினிகாந்தை பாஜக எம்பியான பொர்க்கி புகழ் சுப்பிரமணியன் சுவாமி படு கேவலமாக திட்டியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக மறைமுகமாக அறிவித்திருந்தார். இப்போது இதுதான் ஹாட் டாபிக்காக ஓடுகிறது.

வெளிமாநிலத்தவரான ரஜினிகாந்த் தமிழகத்தின் அரசியலுக்கு வரக் கூடாது என கடும் எதிர்ப்பு நிலவுகிறது. அதேநேரத்தில் ரஜினிகாந்துக்கு ஆதரவும் இருந்து வருகிறது.

சு.சுவாமி எதிர்ப்பு

சு.சுவாமி எதிர்ப்பு

பாஜகதான் ரஜினிகாந்தை விழுந்து விழுந்து வரவேற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் பாஜக எம்பியான சுப்பிரமணியன் சுவாமியோ ரஜினியை கடுமையாக எதிர்த்து வருகிறார்.

தகுதி இல்லை

தகுதி இல்லை

தமது ட்விட்டர் பக்கத்தில் ரஜினியை 420 என்றும் படிக்காதவர்; அரசியலுக்கு வர தகுதியற்றவர் எனவும் கடுமையாக விமர்சித்திருந்தது பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்த நிலையில் சென்னைக்கு இன்று சுப்பிரமணியன் சுவாமி வருகை தந்தார்.

சு.சுவாமி மறுப்பு

அப்போது, ரஜினிகாந்தை பாஜகதானே ஆதரிக்கிறது என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, எங்கே பாஜக ஆதரவு தந்தது? என கேள்வி எழுப்பினார். தேர்தலின் போது ரஜினியை மோடி சந்தித்தாரே என அடுத்த கேள்வி கேட்கப்பட்டது.

அவன் வரமாட்டான்...

அவன் வரமாட்டான்...

அது நடந்தது அப்போ... சசிகலா தலைமைகூடதான் மோடி கை வெச்சார்...அதுக்காக கூட்டணின்னு அர்த்தமாகிடுமா? என எதிர்கேள்வி கேட்டார் சுவாமி. மீண்டும் ரஜினிகாந்த் குறித்து கேள்வி எழுப்ப, அது பழங்கதை... அவன் வரமாட்டான் என ஒருமையில் விமர்சித்தார். இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அநாகரீகத்தின் உச்சம்

அநாகரீகத்தின் உச்சம்

என்னதான் அரசியலில் இருவேறு துருவங்களாக இருந்தாலும் ஒருவரை மரியாதையுடன் அழைப்பது தமிழர் அரசியல் நாகரீகம். ஆனால் அரசியல் அநாகரீகத்தின் உச்சமாக ரஜினிகாந்தை ஏக வசனத்தில் சுப்பிரமணியன் சுவாமி பேசி இருப்பது கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Subramaniyan swamy slams Rajinikanth in abusive words. Rajini;s fans club members condemns him on his statement.
Please Wait while comments are loading...