சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு புதுச்சேரிக்கு இல்ல.. டெல்லிக்கு மட்டும்தான்.. கிரண்பேடி அதிரடி!
சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி: சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
துணை நிலை கவர்னருக்கு தனி அதிகாரம் கிடையாது என சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு, புதுச்சேரிக்கு பொருந்தாது என கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
யூனியன் பிரதேசமான டெல்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார மோதல் இருந்து வந்தது. இருவருக்கும் இடையே யாருக்கு அதிக அதிகாரம் என்பது தொடர்பான பிரச்சினை, நீதிமன்றம் வரை சென்றது.

ஆம் ஆத்மி வழக்கு
இதுதொடர்பாக ஆம் ஆத்மி தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கே அதிக அதிகாரம் உள்ளது என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அரசுக்கே அதிகாரம்
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும், நிர்வாக அதிகாரம் முழுவதும் தேர்தெடுக்கப்பட்ட அரசிடமே உள்ளது என அதிரடி தீர்ப்பு வழங்கியது.

அதிகாரப்போட்டி
இந்நிலையில் டெல்லியை போல், யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும், அதன் துணை நிலை கவர்னர் கிரண் பேடிக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே நீண்ட காலமாக அதிகாரப் போட்டி நிலவி வருகிறது.

நாராயணசாமி எச்சரிக்கை
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தும் எனவும், தீர்ப்பை மீறும் வகையில் கிரண் பேடி செயல்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரிக்கு பொருந்தாது
நாராயணசாமிக்கு பதிலளித்துள்ள துணை நிலை ஆளுநர் கிரண் பேடி டெல்லி அரசியல் சாசன சட்டம் புதுச்சேரி உள்ளிட்ட மற்ற யூனியன் பிரதேசங்களிலிருந்து வேறுபட்டது எனவும், இது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பினை வாசித்து காட்டினார். எனவே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என்றும் கிரண் பேடி தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications