• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹிந்தியில் படம்.. தேசிய அரசியலில் தனி இடம்.. கூட்ட போறேன் பொதுக்குழு.. டிஆர் அதகளம்!

Google Oneindia Tamil News

Recommended Video

  தேசிய அரசியலில் இறங்க போகிறேன்-டி.ராஜேந்தர்

  சென்னை: தமிழகத்திலும் தாண்டி இனி தேசிய அரசியலில் இறங்க போவதாக லட்சிய திமுக தலைவரும் நடிகருமான டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.சென்னை: தமிழகத்திலும் தாண்டி இனி தேசிய அரசியலில் இறங்க போவதாக லட்சிய திமுக தலைவரும் நடிகருமான டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

  சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுகவில் தொடங்கிய தனது அரசியல் பயணம் முதல் வருங்கால அரசியல் திட்டம் வரை பேசினார். அப்போது வரும் 3-ம் தேதியன்று அவரது 64-வது பிறந்த நாளையொட்டி, புதிய, பல நல்ல திட்டங்களையும், செயல்களையும் தொடங்க உள்ளதாக கூறினார். அதில் அவரது தேசிய அரசியல், ஹிந்தியில்திரைப்படங்களை இயக்குவது, சிம்புவின் புது பட ரிலீஸ், உள்ளிட்டவற்றை விரிவாக பேசினார். செய்தியாளர்களிடம் டி.ராஜேந்தர் பேசிய விவரம் இதுதான்:

  எம்ஜிஆர் கூப்பிட்டே நான் கட்சிக்கு செல்லவில்லை. நான் ஏற்றுக் கொண்ட ஒரே தலைவர் கருணாநிதிதான். கருணநிதி மறைந்துவிட்ட இந்த காலகட்டத்திற்கு பிறகு எனது நிலைப்பாடும் மாறியிருக்கிறது. இனி எனக்கு எந்த இடர்பாடும் இருக்காது. அக்டோபர் 3-ம் தேதி எனக்கு பிறந்த நாள் வருகிறது. அன்றைக்கு எங்களுடைய பொதுக்குழுவை கூட்ட உள்ளேன்.

  சுற்றுப்பயணம்

  சுற்றுப்பயணம்

  என் கட்சி சின்ன கட்சியாக இருக்கலாம், சின்னம் கூட இல்லாத கட்சியாக இருக்கலாம், என்னுடைய ஆதரவாளர்களை, அபிமானிகளை திரட்டி, புதிய பாதை, புதிய பரிணாமம், புதிய லட்சியம், என்ற வகையில் எனது கட்சியின் உறுப்பினர் படிவத்தை அன்றைய தினம் வழங்க உள்ளேன். என் கட்சியின் அமைப்புகளை மாற்றி அமைக்க உள்ளேன். சீரமைப்பு செய்ய உள்ளேன். நாடாளுமன்ற தேர்தலை நோக்கி பயணிக்க உள்ளேன். முதல்கட்டமாக கோவை, ஈரோடு என இரண்டு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.

  தேசிய அரசியல்

  தேசிய அரசியல்

  என் பிறந்த நாள் அன்று 2 திரைப்படங்களை எடுக்க திட்டமிட்டுள்ளேன். தமிழகம் மட்டும் அல்லாமல் தேசிய அரசியலிலும் காலூன்ற உள்ளேன். இனியும் தமிழ்நாட்டில் அரசியல் செய்தால் அது சரியாக வராது. அதனால ஹிந்தி திரைப்படமும் எடுக்க போகிறேன். அதனால் லட்சிய திமுக சார்பில் 3ம் தேதி பொதுக்குழுவை கூட்டி அனைத்தையும் கலந்து விவாதிக்க இருக்கிறேன். லட்சக்கணக்கான உறுப்பினர்களை சேர்க்க போகிறேன் என்று சொல்ல மாட்டேன். லட்சியம் உள்ளவர்களை என் கட்சியில் சேர்த்து கொள்வேன்.

  தயாரிப்பாளர் தொந்தரவு

  தயாரிப்பாளர் தொந்தரவு

  வருகிற 27-ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் என் மகன் சிலம்பரசன் நடித்த "செக்க சிவந்த வானம்" படம் வெளியாக உள்ளது. இந்த படம் வெளிவரும் முன்பு அன்பானவன், அடங்காதவன் அசராதவன் பட பிரச்சனையில், அந்த தயாரிப்பாளர் என் மகனுக்கு கொடுக்காத தொல்லையே இல்லை. அவ்வளவு காரசாரமான பேட்டியை தந்தார். நிறைய ஏச்சுக்கள், பேச்சுக்கள். ஆனால் அவர் என் மகனுக்கு கொடுத்த சம்பளத்துக்கான செக் பேங்கிலிருந்து திரும்பிவிட்டது. அதையும் மன்னித்து பெருந்தன்மையுடன் தான் என் மகன் அந்த படத்தில் நடித்தார்.

  கைவிட்ட நடிகர் சங்கம்

  கைவிட்ட நடிகர் சங்கம்

  ஒருமுறை கூவத்தூரில் எம்எல்ஏக்களை வைத்து கொண்டு பிரச்சனை நடக்கிறது. அப்போது அதிமுக கொடி உள்ள வண்டியை என் வீட்டின் முன்னால் நிறுத்திவிட்டு ஷூட்டிங்கிற்கு கூப்பிடுகிறார். காரணம்என் மகன் மீது அரசியல் முத்திரை குத்துவதற்காகத்தான். ஆனால் என் மகன் போகவேயில்லை. படத்தில் நடிக்க என் மகனிடம் ஒப்பந்தம் கூட போடவில்லை. எங்களுக்கு நடிகர் சங்கம் உள்ளிட்ட யாருமே அதை தட்டிக் கேட்கவில்லை. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், போன்றவை சிம்புவுக்கு எதிராகவே செயல்பட்டன. ஆனால் சிம்பு மீது நம்பிக்கை வைத்து படம் எடுத்திருக்கும் இயக்குனர் மணிரத்னத்தின் மனித தன்மைக்கு என் நன்றி.

  ரசிகர் மன்றங்கள்

  ரசிகர் மன்றங்கள்

  தூண் இருந்தால்தான் மண்டபம், தொண்டர் இருந்தால்தான் கட்சி, மன்றம் இருந்தால்தான் நடிகர். என் மகனை தாங்கி இருப்பது சிலம்பரசனின் ரசிகர்மன்றங்கள்தான். படம் வெளியான பின்பு, விரைவிலேயே மன்றத்தை தோழர்களை நிர்வாகிகளை சந்தித்து, சிம்புவின் பரிந்துரையின் பேரில் மன்றத்தை அமைப்பு புணரமைப்பு செய்யப்படும். ரசிகர் மன்றமும் பலப்படுத்தப்படும்.

  நான் காட்ஃபாதர்

  நான் காட்ஃபாதர்

  பீப் பாடல் பிரச்சனை உச்சத்தில் உள்ளது. அப்போது ஒரு உயர் காவல்துறை அதிகாரி என்னை கூப்பிட்டு வழக்கை வாபஸ் வாங்க சொல்கிறார். ஆனால் நான் முடியாது என்றும் வழக்கை சந்தித்தே தீருவேன் என்றும் சொன்னேன். நான் போராளி, என் மகனும் போராளி, அதற்கு காரணம் ரசிகர் மன்றமும். சிலம்புவின் ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு நான் காட் ஃபாதர் ஆக இருக்கிறேன்.

  கருணாஸ் விவகாரம்

  கருணாஸ் விவகாரம்

  அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட பாடல் அல்ல அது. திருட்டுத்தனமாக அதை வெளியிட்டுவிட்டார்கள். ரெக்கார்டிங் தியேட்டரில் வைத்து பாடப்பட்டதா? என் மகனை அழிக்க வேண்டும் என்றே திட்டமிட்ட செயல் அது. இவ்வாறு டி.ஆர். கூறினார். பின்னர் கருணாஸ் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அது தவறுதான், நானும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன், வார்த்தைகளை அளந்து அளந்து பேச வேண்டும். இருந்தாலும் அவரே வருத்தம் தெரிவித்துவிட்டபிறகு அதை பற்றி பேசுவது வேண்டாம் என்று நினைக்கிறேன்." என்றார்.

  English summary
  T. Rajendar announced about National Politics in Chennai
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X