For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீட்டிலிருந்தே வேலை...கை நிறைய சம்பாத்தியம்... தமிழகத்தில் அதிகரிக்கும் எண்ணிக்கை!

Google Oneindia Tamil News

சென்னை: ஆதிமூலம் என்பவரை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.

ஆனால், அவர் ஒரு சிறிய பழைய பேப்பர் கடையின் மூலமாக தன்னுடைய குடும்பத்தையே நடத்தி வருகின்றார்.

இந்த வருமானத்தின் மூலமாக தன்னுடைய கடையையே சொந்தமாக்கி விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

சுயதொழில் மந்திரம்:

ஆதிமூலம் தனி ஆள் அல்ல. நாட்டையே தூக்கி நிறுத்தும் சுயதொழில் முனைவோர் கூட்டணியில் அவரும் ஒருவர். இவர் மட்டுமல்ல தமிழ்நாட்டில் இதுபோன்று வீட்டிலிருந்தே நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் உழைப்பாளிகள் அதிகம்.

புள்ளிவிவர ஆய்வுக் கழகம்:

அவர்களின் விகிதாச்சாரம் தமிழ்நாட்டில் 48.36%. இந்திய நாட்டில் 38.39% என்று இந்திய புள்ளிவிவர ஆய்வுக் கழகம் பொருளாதார கணக்கெடுப்பை வெளியிட்டுள்ளது.

நாட்டின் முதுகெலும்பு:

"தமிழ் நாடு முழுவதும் வீட்டிலிருந்தும், சிறிய கடைகளில் இருந்தும் வேலை பார்ப்பவர்கள் மிகவும் அதிகம். இதுபோன்ற கிளை வேலைகள் பெரிய பெரிய நிறுவனங்களில் இருந்துதான் கிடைக்கின்றன. அவற்றின் முதுகெலும்புகளும் இவைதான் " என்று பொருளாதார நிபுணர் ராமன் மகாதேவன் தெரிவித்துள்ளார்.

வாழ்வாதரம் தரும் வேலை:

வீட்டிலிருந்தே மாநிலம் முழுவதும் பலர் தங்களுடைய வாழ்வாதரத்திற்கான தொகையை இதுபோன்ற வேலைகளின் மூலமாக பெற்று விடுகின்றனர்.

நாடு முழுதும் கோடி மக்கள்:

நாடு முழுவதும் 58.47 கோடி மக்கள் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். உத்தர பிரதேசத்தில் 67 லட்சம், மகாராஷ்டிரா 61.25 லட்சம்.

அதிகரித்துள்ள சதவீதம்:

தமிழ் நாட்டில் 50.52 லட்சம் மக்கள் இதுபோன்ற வீட்டிலிருந்தே செய்யும் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். தற்போது நாடு முழுவதும் இதன் சதவீதம் 41.37 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Consequently, Tamil Nadu has emerged top among states having more household-enterprises, says the latest Economic Census released by the National Statistical Association on Wednesday. The state has 48.36% of the establishments within households out of the total establishments in the state. The national average is 38.39%.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X