ஒதுக்கப்பட்டார் உதயச்சந்திரன்? செங்கோட்டையன் தலைமையிலான கூட்டத்துக்கு அழைப்பில்லை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கல்வித்துறை மேம்பாட்டு ஆலோசனை கூட்டத்துக்கு பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயச்சந்திரனுக்கு தமிழக அரசு அழைப்பு விடுக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டுவந்தவர் உதயச்சந்திரன் ஐஏஎஸ். பள்ளிக்கல்வித்துறை செயலாளராக உதயச்சந்திரன் நியமிக்கப்பட்ட பிறகு பள்ளிக்கல்வித்துறையில் பல பாராட்டுக்குரிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

நேர்மையான அதிகாரியான உதயச்சந்திரன் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டதால் பல்வேறு முறைகேடுகள் தடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையனுக்கும், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரனுக்கும் இடையே கடந்த 2 மாதங்களாக மோதல் இருந்து வந்ததாக தெரிகிறது.

அதிகாரம் குறைப்பு

அதிகாரம் குறைப்பு

இதையடுத்து அவரை மாற்ற தமிழக அரசு முயற்சி செய்தது. இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்ததையடுத்து புதிய முதன்மை செயலாளர் நியமிக்கப்பட்டு உதயச்சந்திரனின் அதிகாரம் குறைக்கப்பட்டது.

அனைவருக்கும் அழைப்பு

அனைவருக்கும் அழைப்பு

இந்நிலையில் சென்னையில் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் கல்வித்துறை மேம்பாட்டு ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெறுகிறது. இதில் கல்வித்துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உதயச்சந்திரனுக்கு அழைப்பில்லை

உதயச்சந்திரனுக்கு அழைப்பில்லை

ஆனால் பள்ளிக்கல்வித்துறை செயலாளரான உதயச்சந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதன்மூலம் உதயச்சந்திரனை தமிழக அரசு ஓரம் கட்டியிருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

அழைக்கப்படாதது அதிர்ச்சி

அழைக்கப்படாதது அதிர்ச்சி

பள்ளிக்கல்வித்துறைக்கு முதன்மை செயலர் நியமனம் செய்யப்பட்டுள்ளதால் உதயச்சந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. அமைச்சர் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்விறை செயலருக்கு அழைப்பு விடுக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Tamil Nadu government has not invited the school education secretary Udayachandran for education development consultation meet. Minister Sengottaiyan has participated in the meet.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற